sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Nov 30, 2016

செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது...

வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது.ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர்அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:
வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளைவினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது.

சிறிய தொகை

கிராமப் பகுதிகளின் தேவைகளுக்காக, 100ரூபாய் போன்ற சிறிய தொகை நோட்டுகளை சப்ளை செய்யும்படி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ராஜ்யசபாவில் அளித்த மற்றொரு பதிலில், ''வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவைக்கேற்ப அதிகரிக்கும்படி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது,'' என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி