Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 24, 2016

வங்கிக் கணக்கில் வார வரம்பு தொகை இன்று தொடக்கம்.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு வியாழக்கிழமை (நவ.24) தொடங்குகிறது.இந்த வார வரம்பு கெடு வரும் நவ. 30-ஆம் தேதி நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது, முதல் நாளன்றே (வியாழக்கிழமை-நவ.24) ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து காசோலைக்கோ அல்லது படிவத்துக்கோ ரூ.24,000 எடுத்துவிட்டால், வரும் 30-ஆம் தேதி வரை தனது கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது.எனினும் ஏடிஎம் மையத்தில், வங்கிக் கணக்கில் என ஒருவர் தேவைக்கேற்ப பணம் எடுக்கும் நிலையில், எடுத்த தொகை போக அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் மட்டுமே வார வரம்பு கெடு நாள் (நவ.30) வரை வங்கியில் எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரேஷனில் பண விநியோகம்: வங்கிக் கணக்கில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ.24,000 எடுக்கலாம் என்றாலும், வங்கிகளுக்கு போதிய பணம் அளிக்கப்படாத நிலை தொடர்வதால் ஒரு வாடிக்கையாளருக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே அளிக்கப்படுகிறது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போன்று நடப்புக் கணக்கு உள்ளிட்ட கணக்கு வைத்துள்ளோருக்கான அதிகபட்ச தொகை ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், பணம் இருப்பதைப் பொருத்து குறைவான அளவே அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

1 comment :

  1. MPC TRB COACHING CENTER FOR MATHEMATICS _ ERODE
    3rd Batch starts from December
    Admission going on
    Study material available
    Further details contact 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி