Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 29, 2016

கிராமப்புறங்களில் வைபை வசதி: பேஸ்புக் திட்டம் !!


இந்தியாவின் கிராமப்புறங்களில் வைபை வசதியை வழங்கிட பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் தீட்டியுள்ளது.
வைபை வசதிநம்பர் ஒன் சமூக வலைதளமாக திகழும் பேஸ்புக், இந்தியாவின் கிராமப்புறங்களில் தரமான வைபை வசதியை வழங்கிட முடிவெடுத்துள்ளது. பேஸ்புக் அதற்கான சோதனை முயற்சிகளில் தற்போதுஇறங்கியுள்ளது.

'எக்ஸ்பிரஸ் வைபை (Express Wi-Fi) என இந்த திட்டத்துக்கு பெயரிட்டுள்ள பேஸ்புக், இதற்காக வைபைவசதி வழங்கும் பிற தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மேலும், இந்த சேவைக்காக சிறிய பறக்கும் லேசர் ரக விமானங்களை வைத்தும் பேஸ்புக் சோதனை நடத்தி வருகிறது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த எக்ஸ்பிரஸ் வைபை வசதி, நடைமுறைக்கு வந்தால் பேஸ்புக்கின் பிரத்தியேக அப்ளிகேஷன் மூலம் இதனைப் பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து Internet.Org. என்ற பெயரில் இன்டர்நெட் வசதியை பேஸ்புக் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி