Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 23, 2016

மின் வாரியம் பெயரில் போலி 'ஆப்'

வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டிப்பர். கட்டண மையம், இ - சேவை மையம், தபால் நிலையம், வங்கிகள் மற்றும் மின் வாரிய இணையதளத்தில், மின் கட்டணம் செலுத்தலாம்.
மத்திய அரசு, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அரசின் அனைத்து சேவைகளையும், கம்ப்யூட்டர்மயமாக்கி வருகிறது. இதன்மூலம், மக்கள், இணையதளம் வாயிலாக, அரசு சேவைகளை எளிய முறையில், உடனுக்குடன் பெற்று வருகின்றனர். மின் வினியோக பிரச்னைக்கு தீர்வு காண, 'மொபைல் ஆப்' எனப்படும் மொபைல் போன் செயலியை உருவாக்குமாறு, மத்தியமின் துறை அறிவுறுத்தியது. இதுவரை, தமிழ்நாடு மின் வாரியம், மொபைல் ஆப் சேவையை துவக்கவில்லை. ஆனால், மின் வாரியம் பெயரில், மின் கட்டணம் செலுத்த போலி, 'மொபைல் ஆப்' வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், பணம் செலுத்தி, பலரும் ஏமாறுவதாக தெரிகிறது. அப்படி இருந்தும், மின் வாரியம் அலட்சியமாக உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலிகளை நம்பி, ஏமாற வேண்டாம் என, நுகர்வோர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்; போலிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மின் வாரியம் சார்பில், மொபைல் ஆப் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. அது செயல்பாட்டுக்கு வரும்போது, அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி