Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 22, 2016

அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம் : மம்தா அறிவிப்பு

''மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமானமம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.
செல்லாத நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாக அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி