Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 24, 2016

மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம்.

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் தெரிவித் துள்ள கருத்துகள் வருமாறு:

எம்.துரைப்பாண்டியன் (பொதுச் செயலாளர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்)அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் செயல் தவறானது. மாதம், 30, 40 ஆயிரம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய பரிவர்த்தனைகளை காசோலை மூலமோ, கார்டு களை பயன்படுத்தியோ மேற் கொள்வதில்லை. உதாரணமாக, வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது ஆகிய வற்றுக்கெல்லாம் காசோலையை பயன்படுத்த முடியாது.

பணத்தைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. தினமும் ரூ.2 ஆயிரம் பணத்தை பெறுவதற்காக விடுப்பு எடுத்து ஊழியர்கள் வங்கியில் சென்று நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களில் வேலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி