Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 25, 2016

சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னைபல்கலை அறிவித்துள்ளது. பேராசிரியர் பணியில் சேரும் தகுதிக்கான, 'நெட்' நுழைவுத்தேர்வு, ஜனவரியில் நடக்கிறது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும் இத்தேர்வுக்கு, சென்னை பல்கலையில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இது குறித்து, பல்கலை மாணவர்கள் அறிவுரை பிரிவு இயக்குனர்,சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'நெட்' தேர்வுக்கு, டிச., 10 முதல், 24 வரையில், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், முதல் தாளுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தாளுக்கு, டிச., 19 முதல், 30 வரை, சிறப்பு பயிற்சி நடக்கும்.

இதில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் வருமான உச்ச வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பங்கேற்கலாம். இன்று முதல் விண்ணப்பங்கள் பெற்று, டிச., 7 மாலை, 4:00 மணிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி