Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 6, 2016

கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு: முதல் பரிசு பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி.

தமிழ் வளர்ச்சித் துறையால் சென்னை மாவட்ட அளவில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம்பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:

தமிழ் வளர்ச்சித் துறையால் சென்னை மாவட்ட அளவில் 11, 12-ம் வகுப்பு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.இதில், கவிதைப் போட்டியில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி லோ.கற்பகம் முதல் பரிசையும், பிரின்ஸ் பதின் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி தா.ஜனனி 2-ம் பரிசையும், முருக தனசுகோடி மகளிர் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி செ.மாரியம்மாள் 3-ம் பரிசையும் பெற்றனர்.கட்டுரைப் போட்டியில் விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி நீ.இளவரசி முதல் பரிசையும், எருக்கஞ்சேரி புனித சூசையப்பர் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் கி.வசந்தகுமார் 2-ம் பரிசையும், கொருக்குப்பேட்டை டேனியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் வெ.சுபாஷ் 3-ம் பரிசையும் பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் அயன்புரம் ஊ.பு.அ. செளந்திரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் ஆ.ஜான்பால் தினகரன் முதல் பரிசையும், சென்னை தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் ஜ.சதாம் உசேன் 2-ம் பரிசையும், சென்னை ராமகிருஷ்ணா மிஷன்பதின்நிலை மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் இரா.கா. விசுவகண்ணன் 3-ம் பரிசையும் பெற்றனர்.மேற்கண்ட போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி