Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 24, 2016

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு

ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல் இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை.
இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்து மற்றும் அதற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள் முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப் பட உள்ளது.அதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடை களில், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம் பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம் தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு நடத்த, உணவு துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம் தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை. அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே, ஆதார் விபரம் தரப்பட்டுள்ளது.இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி தாமத மாகி வருகிறது. ஏன் ஆதார் விபரம் தராமல் உள்ளனர் என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில் ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா மல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி