Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 24, 2016

NCSTC சார்பில் 24 ஆவது NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS - 2016 / கோவை மண்டலத்தில் 13 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு.

இந்திய அரசின் NCSTC சார்பில் 24 ஆவது NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS -2016  கடந்த வாரம் கோவை மண்டல நிலை அளவிலாக கருமத்தம்பட்டி ஜான்சன்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
மண்டல அளவிலான இந்த நிகழ்வுகளில் பள்ளி குழந்தைகளுக்கான அறிவியல் புதுமைகள்என்ற சிறப்பு வாய்ந்த செயல்பாடுகளுக்கான களம் அமைக்கப்பட்டது.

 குழந்தைகள்அறிவியல் தொடர்பான பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.இதுதவிர கோவை மண்டல அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்மாணாக்கர்களுக்கான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை அதிக ஆர்வத்துடன் பல பள்ளிகள்சமர்ப்பித்தன.மொத்தம் 136 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் 13 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் (கொல்கத்தா) நடைபெற்றகுழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  முதல்தர நிலை பெற்ற ஆய்வுக் கட்டுரையைசமர்ப்பித்து வெற்றி பெற்று தமிழகத்தின் சிறப்பை நிலை நாட்டிய கோவை,ஒட்டர்பாளையம் கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இந்த முறை நான்குஆய்வுக் கட்டுரைகளை அந்த பள்ளி மாணாக்கர்கள் சமர்ப்பித்தனர். அதில்"குறுந்தானியங்களும், மண்வளப் பாதுகாப்பும்"என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையும் மண்டல அளவில் சிறந்த  படைப்பாக தேர்வுசெய்யப்பட்டது.

சிறப்பான முறையில் தங்கள் படைப்பை முன்மொழிந்து இளம் விஞ்ஞானிகள் எனும்விருதுகள் வென்ற கோவை கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ( இந்துஜா,சினேகா, குகப்பிரியா, சத்யப்பிரியா, ஐஸ்வர்யா )  தம் மகிழ்ச்சியைதெரிவிக்கையில்"கள ஆய்வுகளில் கிடைத்த அனுபவங்களை ஆர்வமாக கற்று அறிவியல் மற்றும் தமிழ்ஆசான்களின் வழிகாட்டலின்படி புதுமை வழியில் ஆய்வு மேற்கொண்டதன் விளைவு, குழுசெயல்பாடுகள், ஆக்கப்பூர்வமான தகவல் தேடல் இவை அனைத்திற்கும் மேலாகதமிழகவேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம்,சுதந்திரம் இவை அனைத்தும் இந்த வெற்றியை வசமாக காரணமாக அமைந்துள்ளன" எனகூறினர்.மாநில அளவில் ( தமிழகம் முழுவதும் ) இதன் அடுத்த கட்ட நிகழ்வுகள் மற்றும்போட்டிகள் டிசம்பர் 11,12,13 ஆம் தேதிகளில் கோவை மாவட்டம் KPR  கல்லூரியில்நடைபெற உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி