Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 1, 2016

செயல்படாத PF. கணக்குகளுக்கு வட்டி விரைவில் அறிவிக்கை வெளியீடு.

செயல்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) கணக்குகளுக்கு 8.8 சதவீத வட்டி வழங்குவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

செயல்படாத பி.எஃப். கணக்குகளுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து வட்டி வழங்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, செயல்படாத பி.எஃப். கணக்குகளுக்கு வட்டித் தொகை வழங்கி, அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கிறோம்.
அந்த பி.எஃப். கணக்குகளுக்கு 8.8 சதவீத வட்டி வழங்கப்படும். இதுதொடர்பான கோப்புகளில் ஏற்கெனவே கையெழுத்திட்டுவிட்டேன்.
அதற்கான அறிவிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும்.

இதன் மூலம், 9.70 கோடி ஊழியர்கள் பலன்பெறுவார்கள்.
நாடு முழுவதும் செயல்படாத பி.எஃப். கணக்குகளில் தற்போது 42,000 கோடி வரை இருப்பு உள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்று அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:
ஒரு பி.எஃப். கணக்கில் தொடர்ந்து 36 மாதங்களுக்கு தொகை ஏதும் செலுத்தப்படவில்லை எனில், அது செயல்படாத கணக்காக கருதப்படும்.
தனி நபர்கள் வைத்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பி.எஃப். கணக்குகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன், அந்தக் கணக்குகளுக்கு வட்டித் தொகை வழங்கப்படும்.
மக்கள் தங்களது பணத்தை நீண்ட காலத்துக்கு சேமித்து வைக்க விரும்பினால், அதை பி.எஃப். கணக்கில் முதலீடு செய்யலாம். செயல்படாத கணக்காக இருந்தாலும், அதில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படும். இது, பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமும் கூட. அதை கோரப்படாத பி.எஃப். கணக்காகக் கருத முடியாது.


இந்நிலையில்,வருங்கால வைப்பு நிதி தொடர்பான ஆய்வுக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் மண்டல அலுவலகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி