Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 10, 2016

TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி

மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.

அதற்காக தமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம் பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொரு தகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்த தேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.

இந்நிலையில் கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மதிப்பெண்களில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை வழங்க முடிவு செய்தது. 2014ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்பு நடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.

இதையடுத்து தேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வை நடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

தமிழக அரசின் சார்பில் 2014ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்து வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதி வாதத்தை கேட்ட பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம் இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர் கூறியதாவது:

உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ் முறையும் அமல்படுத்தப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள் , பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு 15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு 25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர் கூறினார்.

71 comments :

  1. Super god irukaran.rompa nanri.be happy friends.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கூறியது போல் தற்போது படித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகவும் இருக்கும். படிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு படித்தவர்களின் நிலையை இந்த அரசு நினைத்து பார்ப்பதில்லை. என்னதான் டெட் மதிப்பெண் 150 -க்கு 150 எடுத்தாலும் வெய்ட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை இந்த அரசு உணரவே இல்லை. ஏற்கனவே சீனியாரிட்டி போஸ்டிங் இருந்தும் எங்கள் வயிற்றில் அடித்து அதை போடாமல் பல நீதி மன்றம் சென்றும் வயிற்றில் அடித்தார்கள். பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்களால் வருமானத்திற்கும் தடை ஏற்படாமல் எங்களால் 120-க்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப் பாடுகிறார்களே அவர்களின் வயிற்றிலும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தாரின் வயிற்றிலும் அடிக்கிறோமே என்பதை எவரும் உணர்வதில்லை. இனியாவது பால் வார்க்கும் விதமாக வயது அதிகமானவர்களுக்கு என்று நல்ல முடிவு எடுப்பார்களா? அல்லது நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வயிற்றெரிச்சலோடு சாகட்டும் என்று நினைப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

      Delete
    2. விகடன் செய்தி தவறு

      Delete
  2. Super god irukaran.rompa nanri.be happy friends.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. My Jesus never give up me.Thank you Jesus.Praise the Lord.

    ReplyDelete
  5. 90 மார்க் எடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென தீர்ப்புகள் உள்ளதா?

    ReplyDelete
  6. ஒன்றும் புரியவில்லை

    ReplyDelete
  7. What about 82 to 89 people?appo ivangaluku job thara matangala? Supreme Court also said they r eligible. Why our govn didn't consider these people for job? I didn't understand what she said?

    ReplyDelete
  8. Appo munadi posting potavangala enna pana poringa(82-89)..avangaluku job kodutha apo ellarukum thana podanum..athu enna 60% matum job

    ReplyDelete
    Replies
    1. 2012 la nadantha exam la 82-89 marks eduthavanga not eligible ippo ungala eligible nu sollurangalla ithumattum niyayama???

      Ippo Ungalukku kudutha eligible avangalukku kudukkanumilla athulam pesamattinga

      Delete
    2. last TNTET exam la irunthu than 55% yedutha pass nu sollirukanga.... 2012 la nadantha TNTET Exam ku sollala.....

      Delete
  9. இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அது தான் குறைந்தபட்ச மதிப்பெண் 82 னு உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு ,இன்னும் ஏன் 90 மார்க் எடுத்தவர்களுக்கு பணி வழங்கப்படும் னு பீலா விடுற ???

    தீர்ப்ப ஒழுங்கா படி
    அப்புறமா பேட்டி குடு

    ReplyDelete
    Replies
    1. Fake news na.. kalviseithi la sensation kaga indha madiri news elam podradhae velaya pochu..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 60% enbathai evarkal estathirkku marrikolvathe vazhakkam........ appuram etharkku Judgemet???????...........

      Delete
    4. First up all, we must understand one thing, after the Judgement, till now Govt. doesn’t declare that we won the case for suppressed people. This is a historical win. The Govt. should have capitalized the scenario where as Official and Minister relieved their sigh, saying that obstacles for conducting TET is removed and they can easily conduct the TET further.

      But we people are praising the Govt. for relaxing the mark where as officila declare that they would consider 90+ marks in future. Where we are????????

      Delete
    5. Ayya samy ne english la puli than. Ok தமிழ் ல சொல்லு

      Delete
  10. 90 eduthavangalukagathu epa job list poduvinga

    ReplyDelete
  11. fake news dont beleave this because this is not posslble after jurdgement given yesterday favour of go25 and go71.dont confused, if they do so then what is the meaning for jurdgement

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. 90க்கு மேல்மதிப்பெண் எடுத்தவர்க்கு மட்டும் பணியா? எதற்கு இந்த தீர்ப்பு? இது கண் துடைப்பு நாடகம்....!

    ReplyDelete
    Replies
    1. 60% enbathai evarkal estathirkku marrikolvathe vazhakkam........ appuram etharkku Judgemet???????...........

      Delete
  14. Relaxation and weightage system continued education minister source dinamalar

    ReplyDelete
  15. Relaxation and weightage system continued education minister source dinamalar

    ReplyDelete
  16. Mrs. Raja rajeswari madam,
    first read the judgement copy once or twice let you know the means, then give the interview. in that sp judgement they clear mentioned as per tn govt 5 % relaxation which given by Honorable CM, will be continued and there is no any interruption. at the same time weihtage system will follow while prepare the selection list.
    as being a govt employee should give respect to SP Order.

    ok i will come to your way supposes to be you are going to make selection list with 90 marks. then what about the last appointment which done with 5 % relaxation

    now could you terminate them from the job. follow the Honorable CM order that is good for all.

    ReplyDelete
  17. pona tet ennoda mark 93 nan again eluthelama venava sollunga my weitage is low because of 12 mark

    ReplyDelete
  18. Even we understand why she can't understand the judgment.After judgment how she spoke like this.. what about 82_89?? Just eligible not for job.what a decision!!!!

    ReplyDelete
  19. நண்பர் கூறியது போல் தற்போது படித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகவும் இருக்கும். படிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு படித்தவர்களின் நிலையை இந்த அரசு நினைத்து பார்ப்பதில்லை. என்னதான் டெட் மதிப்பெண் 150 -க்கு 150 எடுத்தாலும் வெய்ட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை இந்த அரசு உணரவே இல்லை. ஏற்கனவே சீனியாரிட்டி போஸ்டிங் இருந்தும் எங்கள் வயிற்றில் அடித்து அதை போடாமல் பல நீதி மன்றம் சென்றும் வயிற்றில் அடித்தார்கள். பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்களால் வருமானத்திற்கும் தடை ஏற்படாமல் எங்களால் 120-க்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப் பாடுகிறார்களே அவர்களின் வயிற்றிலும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தாரின் வயிற்றிலும் அடிக்கிறோமே என்பதை எவரும் உணர்வதில்லை. இனியாவது பால் வார்க்கும் விதமாக வயது அதிகமானவர்களுக்கு என்று நல்ல முடிவு எடுப்பார்களா? அல்லது நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வயிற்றெரிச்சலோடு சாகட்டும் என்று நினைப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  20. Ithula our correction....2012 la nadantha TET exam la dhuradhishtavasama teachers kuraivana ennikaiyil pass aananga appadi nu oru line irukku ..adhu thavarana oondru.oru exam ku evlo time allot pannanum endra knowledge illama romba kuraivana neramey odhukkappattadhu.Adhai realise panni than Government thirumbavum TET exam nadathunanga.Sariyana seithigalai pathividumaru kettukolgiren.Yarum Aasiriyargalin thaguthiyai kuraithu mathipida venam.

    ReplyDelete
    Replies
    1. Avan avanuku enna,pirachanai inga oduthu. Ithula unga,பகுமாணத்த காட்டுறீங்களா

      Delete
  21. TNPSC முறையை ஏன் பின்பற்றக்கூடாது.? காலிப்பணியிடத்தின் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்றாலூம் மீண்டும் மறுதேர்வுக்கு தயாராக வேண்டும். 2014ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கினால் மீண்டும் பதிவுமூப்புறையை பின்பற்றுவது போன்று அமையும்.

    ReplyDelete
    Replies
    1. Tnpsc 2010 LA pass pannuna naparukum tharpothu 6 am kata 7 am kata kalanthaivil nirapapadukirathu.

      Delete
  22. Sir ethu thahuthi theirvu than poatti thervu illa

    ReplyDelete
  23. The teachers who got 90 marks in the tet. their state of life is really poor and incomparable with anything else. Because till now they don't have a gov job, even though they passed in the tet with 90 marks. If our government wants to do anything good to these teachers. Our gov has to give the first priority or preference to the teachers who got 90 marks. Only then the justice of Gandhi would be followed. God sees everything, we need to give account to God for what we are and for what we do. Let us all pray so that the teachers who got 90 marks, will all get the job first.........Jai hind Jai hind vandhe madharam.....

    ReplyDelete
  24. Replies
    1. Trb tollfree number sollunga pls

      Delete
    2. trb-044,28272455,7373008144,7373008134

      Delete
  25. appo 90 mark eduthavangaluku job kidaikka chance irukka? anybody tell...

    ReplyDelete
  26. appo 90 mark eduthavangaluku job kidaikka chance irukka? anybody tell...

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. What is the status about above 90 mark candidates

    ReplyDelete
  29. நல்ல முதல்வர் , மிக நல்ல கல்விச்செயலர் . 1991 ல் 10 ம் வகுப்பு மாநில முதல் மதிப்பெண் என்ன ? 2014 ல் 10 ம் வகுப்பு மாநில முதல் மதிப்பெண் என்ன ? என ஒப்பிட்டு பார்க்க கூடவா தெரியவில்லை ? ஒரு பாராளுமன்ற தேர்தலுக்காக 90 + பலி கிடாவாக ஆக்கப்பட்டு விட்டோம். நாம் 58 வயது வரை டேட் எழுதினாலும் , வேலைக்கு போக முடியாது. வேலைக்கு போக வேண்டுமானால் , முதலில் 10 & +2 மதிப்பெண் உயர்த்த வேண்டும். இது நடக்குமா? உச்ச நீதி மன்றமும் , தவறான தீர்ப்பையே வழங்கி உள்ளது. கிராம புரத்தில் அரச மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுபவர்களிடம் சொன்னால் கூட இந்த தவறான தீர்ப்பை தந்து இருக்க மாட்டார்கள். 90 + கு ஒரே ஆறுதல் , அறிவார்ந்த கல்வி அமைச்சர் , சிறந்த கல்வியாளர் . ஆனால், நமது கல்விச்செயலர் , தவறான முடிவு எடுத்துவிட்டாலும் அதையே தொடர்ந்து நடைமுறை படுத்த முயல்வார். அதனால் கல்வி அமைச்சரையும் மீறி 82 + கு சாதகமாகவே ஆசிரியர் நியமனம் இருக்கும். கடைசி 10 - 15 ஆண்டுகள் பணியாற்ற ஆசை பட்டவர்கள் , மறந்து விடுங்கள். கடவுளிடம் வேண்டுங்கள் இந்த ஆட்சியும் , இந்த கல்வி செயலரும் விரைவில் மாற வேண்டும் என . . .

    ReplyDelete
  30. 2013'la 90 mark keela yeduthu 5% salukai mark'la job'ku ponavangalukku 3 or 5 years'kulla re-exam yeluthu marupadium pass pannanum'nu order potanum. 5% salukai valangiyathu thavaru ilai anaal athanai 2013'la salukai valangiyathu thavaru. 2014'la parliment election'kaka aarasu seitha muttal thanam. 2013'ku apuram varum exam'ku mattume 5% salukai porunthum yendru sollierukka vendum. weightage method is totaly wrong and worst method.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Ramachandran.
      In the SC Judgement yesterday (09.11.2016), clearly mentioned in the column 18, RTE Act 23(2), confirming the righteous of Govt. role to relax mark,

      The Message extract from the yesterday Judgement 18th Column
      “On such request, the Central Government may, if it deems necessary, by Notification, relax the minimum qualification required for appointment as a teacher, for such period, not exceeding five years, as may be specified in that Notification. In terms of Section 23 (2) power to relax such minimum qualification has been reserved with the Central Government.”

      Delete
  31. Yen tet mark 81 or 82 therila sir marathu pochi yapati therichikarathu nan antha wed addresse solluga sir

    ReplyDelete

  32. Yen tet mark 81 or 82 therila sir marathu pochi yapati therichikarathu nan antha wed addresse solluga sir

    ReplyDelete
    Replies
    1. நீயெல்லாம் சுத்த Waste

      Delete
  33. Sir Ennoda waitage 74.36 just 0.55 la pochu sir inimel posting potta enaku kidaikuma illa marupadiyum exam pannanuma sollunka sir pls

    ReplyDelete
    Replies
    1. 60% enbathai evarkal estathirkku marrikolvathe vazhakkam........ appuram etharkku Judgemet???????...........

      Delete
  34. அப்போ ஏற்கனவே 82 to 89 மார்க் எடுத்து வேலைக்கு போய் இருக்கும்போது எப்படி இவங்க மட்டும் 90 க்கு மேல் நு சொல்லுராங்க!ஒன்னும் புரியல எல்லோரயும் கஷ்ட்ட படுத்தாதீங்க!

    ReplyDelete
  35. Salem Cluster அவர்கள் நல்ல கருத்துக்கள் கூறியுள்ளார். நன்றி! முப்பது வயதை தாண்டியவர்கள் சாகட்டும் என்று மேலே கூறியது போல் கல்வி செயலர் இந்த அரசு எல்லாம் நினைக்கிறார்கள்! மீண்டும் மறு பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  36. 60% என்று சொல்வது TET மதிப்பெண்ணை குறிப்பிடுகிறார்க‌ளா அல்லது Weightage கனக்கிட்ட பிறகு வரும் 60% மதிப்பெண்ணை குறிப்பிடுகிறார்க‌ளா

    ReplyDelete
  37. விகடன் செய்தி தவறு

    ReplyDelete
    Replies
    1. சொல்லிட்டாரு TRB BOARD HEAD.

      Delete
  38. 1st pass pannavangaluku 1st preference kodukanum kandipa... ivlo nala senioritynu wait pannom ..?? apuram Examnu Soninga Athum Pass pani 3 yrs Achu ? Ipo Marupadium Mothalla Irunthu Padichu Pass Pananuma?? Erkanave Thaguthiyanavargal (2013 Passed Canditates )Irukumpothu Thirumpa Ethuku Thakuthi Ther

    ReplyDelete
  39. 82-89 eduthavangaluku erkanave posting potu irukangala appo mathavangalumkum job venumnu ondru sernthu poraduvom

    ReplyDelete
  40. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

    ReplyDelete
  41. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி