Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 11, 2016

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2012ல்அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் பணிக்கு தகுதி என, அறிவிக்கப்பட்டது.
அதாவது,'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, பல ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டனர்.

இதன்பின், 2013ல் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது. முன்னேறிய வகுப்பினர் தவிர மற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றும், இட ஒதுக்கீடு விதிப்படி, ஐந்து மதிப்பெண் தளர்வும் அளிக்கப்பட்டது. அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்விஅமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.தமிழக அரசின், வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தோருக்கு வேலை வாய்ப்பு சிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமான மதிப்பெண் முறை கிடையாது.

தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும் குதிரைக்கொம்பாக இருந்தது. சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில் தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு மிக குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என்பதால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

19 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வெய்டேஜ் முறை அரசணையை ரத்து செய்துவிட்டு
      புதியதாக ஆசிரியர் தேர்வு வைக்காமல், 2013-ல் TET-ல் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்ப
      TET மதிப்பெண்களை வைத்து சீனியார்ட்டி அல்லது அவரவர் பாடவாரியாக மற்றொரு தேர்வு வைத்து ஆசிரியர் பணி செய்ய மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Delete
    2. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்

      Delete
  2. வெய்டேஜ் முறை மாறவேண்டும்.

    ReplyDelete
  3. கல்வி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் வெயிட்டெஜ்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் செய்வரா என்பது கேள்வியே

    ReplyDelete
  4. Anaivarum onru inainthu weightage Ku ethiraga poraduvom.

    ReplyDelete
  5. Weightage thotarnthu nadaimurayil irunthal d.ted(500rs).b.ed(1000rs).pola agividum.

    ReplyDelete
  6. admin avarkalay 85 Alla 82 mathipen athavathu 55.percentage

    ReplyDelete
  7. All departments high posts experience person . But teacher wanted fresh by tntet exam. What method?

    ReplyDelete
  8. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்

    ReplyDelete
  9. பத்தாண்டுக்கு முன்னால் படித்தவனும் இப்போது படித்தவனும் ஒன்னாம் பத்தாண்டுக்கு முன்னால் எப்படியும் இரண்டு பாடத்திற்கு ஆசிரியர் இருக்காது அதுவும் கிராமப்புறம் சொல்லவே வேண்டாம் அனைத்து பள்ளிகளும் ஒரே மாதரி கற்பித்தல் இருக்கிறதா? தனியார் பள்ளி பத்து பனிரெண்டாம் வகுப்பு இரண்டாண்டு நடத்தப்படுகிறது அரசுப் பள்ளி அப்படியில்லை சரி எல்லாக்கல்லூரியும் ஒரே மாதரி பாடத்திட்டமா வைத்துள்ளது தன்னாட்சி கல்லூரிகள் மதிப்பெண் எப்படி வழங்குவார்கள் என்று அனைவருக்கும் தெரியும் எனவே இந்த வெய்ட்டேஜ் என்பது பொதுவானதாக இருக்க முடியாது அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்

    ReplyDelete
  10. 82-89 eduthavangaluku erkanave posting potu irukangala appo mathavangalumkum job venumnu ondru sernthu poraduvom

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Already pass panninavangaluku posting???

    ReplyDelete
  13. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்.

    ReplyDelete
  14. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி