Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 8, 2016

TNTET:தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு !

தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25 வழி செய்கிறது. அதேபோல் அரசாணை எண்  71-ன் படி 'வெயிட்டேஜ்’ முறையும் ஆசிரியர் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தகுதி தேர்வில் மதிப்பெண் விலக்கு என்பது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும் என்று விதிகள் இருக்கும் நிலையில், அனைவருக்கும் மதிப்பெண் விலக்கு வழங்குவது சரியல்ல என்றும், 'வெயிட்டேஜ்' முறை பின்பற்றப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர் படிப்பை முடித்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி, எனவே அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு குழப்பத்தை தருவதாகவும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவானத்து நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது இன்று மாலை இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம்   அறிவித்துள்ளது.

28 comments :

  1. This not a SC/ST Relaxation problem.

    Giving relaxation AFTER the interview is the main problem.

    Can they give relaxation for SC/ST after the interview.

    This the common problem for community,

    Don't DIVERT the matter

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Relaxation is definitely needed for SC/ST.

    Before the exam they should give.

    After the exam is couldn't accept

    ReplyDelete
  4. Whatever be the judgement,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    BUT,
    SO MANY MANY MANY thanks to

    case filled candidates,,,,,
    SPECIALLY to LAVANYA Madam and others

    ReplyDelete
  5. Farooq sir....u got job already..I think. Am I right??

    ReplyDelete
  6. Farooq sir....u got job already..I think. Am I right??

    ReplyDelete
    Replies
    1. Got sg but missed bt...coz weight age. 0.6 difference

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. I remind honourable judge John Micheal d'cunka.... Need our justice...

    ReplyDelete
  9. நல்லதே நடக்கட்டும் !!! நியாயம் கிடைக்கட்டும்!!!

    ReplyDelete
  10. I expect justice from sivaKeerthi sing...today I saw the certificate verification hall... I felt sad.. because of this system.. I lose my job..

    ReplyDelete
  11. Pothuvaka 2013 tet il therci petra anaivarukum Neethi kidithal makilchi.

    ReplyDelete
  12. Thanks to Lavanya madam & others.

    ReplyDelete
  13. Thanks to Lavanya madam & others.

    ReplyDelete
  14. What major r u? Farooq sir... I too lost with 0.5 differ
    from communal wise...

    ReplyDelete
  15. நாளை வரப்போகும் தீர்ப்பு....அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்
    தீர்ப்பாக அமைய இறைவனை வேன்டுவோம்..3 ஆண்டு கால தோடலுக்கு
    விடை கிடைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. நாளை வரப்போகும் தீர்ப்பு....அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்
    தீர்ப்பாக அமைய இறைவனை வேன்டுவோம்..3 ஆண்டு கால தோடலுக்கு
    விடை கிடைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. What major r u? Farooq sir... I too lost with 0.5 differ
    from communal wise...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி