Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 12, 2016

நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டுமா? - மனிதநேயமற்ற செயல் - VIKATAN News

திருப்பூர் அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், வகுப்பறைக்குள் செல்போனை பயன்படுத்தி வந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதனை அடுத்து,  இனி பள்ளிக்குசெல்போன் எடுத்துவரக்கூடாது எனவும் மீறி எடுத்து வந்தால் அந்த போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தப் பிறகே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இதனை அடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில், ஆசிரியர்கள் இனி நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும்; வகுப்பு நேரங்களில் அமர்ந்து பாடம் நடத்தக்கூடாது எனவும், உட்காரவேண்டிய தேவை இல்லாததால் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலிகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்." உடல் நலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், மாதவிடாய் காலங்களில் இருக்கும் ஆசிரியைகள் என பலரும் இதனால் பாதிக்கப்படுவர்.

 ஏனெனில், ஒரு பாடவேளைஎன்பது 45 நிமிடங்கள் ஆகும். 45 நிமிடங்களும் ஆசிரியர்கள் நின்று கொண்டே பாடம் நடத்தினால், ஒவ்வொரு பாடவேளைக்கும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தாலே நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் சராசரியாக எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பது தெரியும். இது மனிதநேயமற்ற செயல்" எனஆசிரியர்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

15 comments :

  1. தனியார் பள்ளிகளில் நாள் முழுதும் நின்றுகொண்டுதான் பாடம் நடத்த வேண்டி உள்ளது

    ReplyDelete
  2. இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டிய ஒரு நடைமுறை. நாள் முழுவதும் நின்று கொண்டே பாடம் நடத்துவதென்பது, ஆசிரியர்களுக்கு உடல் உபாதைகளைக் கொடுத்து மன உளைச்சலை உண்டாக்கும். இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும்.

    ReplyDelete
  3. எவன் சொல்கிறானோ அவன் நின்று நடத்தி பார்க்கட்டும் ...முதலில்.

    ReplyDelete
  4. எவன் சொல்கிறானோ அவன் நின்று நடத்தி பார்க்கட்டும் ...முதலில்.

    ReplyDelete
  5. நானும் தனியார் பள்ளி ஆசிரியை தான்,எங்கள் பள்ளியில் கடந்த 5ஆண்டுகளாக இந்த முறை நடைமுறையில் உள்ளது ...

    ReplyDelete
  6. ஆசிரியர் நலன் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சங்கங்கள் என்ன செய்கின்றன. பேப்பர் திருத்துவது நோட்டு திருத்துவது போன்ற வேலைகலை எவ்வாறு செய்வது.கேட்பத்ற்கு யாரும் இல்லை என்றால் இப்படித்தான் ஆடுவார்கள் அதிகாரிகள்.

    ReplyDelete
  7. ஆசிரியர் நலன் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சங்கங்கள் என்ன செய்கின்றன. பேப்பர் திருத்துவது நோட்டு திருத்துவது போன்ற வேலைகலை எவ்வாறு செய்வது.கேட்பத்ற்கு யாரும் இல்லை என்றால் இப்படித்தான் ஆடுவார்கள் அதிகாரிகள்.

    ReplyDelete
    Replies
    1. Not even giving respect....what all teachers sangam's are doing,the sangam's are not strongly raising the voice for teachers

      Delete
  8. Asiriyarai madhikkadha endha naadum urupadadhu

    ReplyDelete
  9. In private Schools we teachers standing for a whole day during revision time.

    ReplyDelete
  10. In private Schools we teachers standing for a whole day during revision time.

    ReplyDelete
  11. This s too much....!!!!!. Private school teachers r getting harder and harder. They r working with strength of every nerve. But none is asking....and supporting and talking.

    ReplyDelete
  12. This s too much....!!!!!. Private school teachers r getting harder and harder. They r working with strength of every nerve. But none is asking....and supporting and talking.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி