Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Dec 2, 2016

தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல் : ஏப்ரலில் நடத்த ஏற்பாடு.

ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்., 17, 19ல் நடக்கும்' என செப்., 25ல் அறிவிக்கப்பட்டது.


ஆனால், இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதுகுறித்த வழக்கு ஜன., 3க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக, துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவி காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என தெரிவிக்கப்பட்டது. டிச., 31ல் இவர்கள் பதவி காலம் முடிகிறது.

இவர்களது பதவி காலத்தை நீடிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
'ஜனவரியில் பொங்கல், மார்ச்சில் அரசு பொது தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி