Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Dec 1, 2016

jio இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்த வசதி ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி ஜியோவின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

முகேஷ் அம்பானி பேசியதாவது: 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர் ஜியோவில் இணைந்துள்ளனர். ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைகின்றனர். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பை விட ஜியோ அதிக மக்களை கவர்ந்துள்ளது. மேலும் ஜியோவின் சலுகைகளால் சாமானிய மக்கள் அதிகம் பயன்பட்டுள்ளனர் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். 

மேலும் புதிதாக ஜியோவில் இணைபவர்களுக்கு டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்த வசதி ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஜிவ் சிம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று அம்பானி தெரிவித்தார். 

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி