sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Mar 21, 2017

'சரியாக செயல்படாத கல்லூரிகளை மூட முடிவு' -மத்திய அரசு திட்டம்..!

சரியாகச் செயல்படாத, கல்லூரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லூரி, பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. யு.ஜி.சி என்று சொல்லப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைகளின் தரத்தை ஆராயவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் பேசும்போது, "ஒவ்வொரு பல்கலைமற்றும் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல்கலைக்கழகங்கள் மூன்று தரங்களாக பிரிக்கப்படும். மிகச் சிறந்தவை, மேம்படுத்த வாய்ப்புள்ளவை, மிக மோசமானவை என மூன்று வகைகளாகத் தரம் பிரிக்கப்படும்.மிகச் சிறந்த கல்லூரிகளுக்கு கூடுதல் வசதிகளும், மானியங்களும் வழங்கப்படும்.

மேம்படுத்த வாய்ப்புள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் முன்னேற என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ள முடியும் என்ற ஆலோசனை வழங்கப்படும். மிக மோசமானவை பிரிவில் உள்ள கல்லூரி, பல்கலைக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் இவற்றை மேம்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும்.அதன்பிறகும் முன்னேற்றம் ஏற்படாமலிருந்தால் அவை மூடப்படும் அல்லது மற்றொரு கல்லூரியுடன் இணைக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி