இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' -மத்திய மனித வள அமைச்சகம் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2017

இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' -மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்.


ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ்  உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிகல்வி செயலாளர்

மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஒரு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் மத்திய பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை செயலாளர் அணில் ஸ்வரூப் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

தகுதித்தேர்வு

ஆசிரியராக வர விரும்பும்  பெண்கள், ஆண்களுக்காக மத்திய அரசு சார்பில் மதிப்பீடு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சி.ஏ.டி. அல்லது எஸ்.ஏ.டி. தேர்வு போன்று இது இருக்கும். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுக்கான அடித்தளமாக உருவாக்க இருக்கிறோம்.

ஆலோசனை

இந்த தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகும் பெண்கள், ஆண்களுக்கு ஆசிரியராவதற்கான ஒரு தகுதி கிடைக்கும். இது குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்த திட்டத்தை அந்தந்த மாநிலங்கள் விருப்பம் போல் செயல்படுத்த உரிமை உண்டு.  இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடத்திலும் பேச்சு நடத்தியபின், பணியமர்த்தும் நிறுவனங்கள் முடிவு செய்யும்.

சோதனை திட்டம்

ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் வருகை உறுதிசெய்யப்பட வேண்டும். இதற்காக ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட, பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக சட்டீஸ்கரில்கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறேன்.

சட்டீஸ்கரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. ஆசிரியர்களின் வருகைபதிவேடு ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் அது சம்பள கணக்குடன் இணைக்கப்படும்.

பி.எட்.கல்லூரிகள்

பி.எட். கல்லூரிகளில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், 40 சதவீதம் கல்லூரிகளை நாங்கள் தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கறோம். இது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ்களுக்கு 40 சதவீத கல்லூரிகள் இன்னும் பதில்அளிக்கவில்ைல. உள்கட்டமைப்பு விதிமுறைப்படி இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

22 comments:

  1. அனைத்து தேர்வுகளையும் ஆசிரியர்களை வைத்தே சோதியுங்கள். இன்றைய தேதியில் அவர்கள்தான் இளித்தவாயர்கள். நாட்டை ஆளும் அரசியல் கட்சிக்காரன் படிப்பறிவு இல்லையென்றாலும் பரவாயில்லை நாட்டை ஆளலாம்.... நல்ல நாடுடா....

    ReplyDelete
  2. Peasi perojanam illai....

    Adutha elaction la nikka poren...

    ReplyDelete
    Replies
    1. Qualified person than election nikka vendum sattam konduvanga,, appo intha nadu urupudum.

      Delete
  3. NET EXAM PASSED panninavonga velai elloma roadla nikkarom ennum exam vatchi enna prayojanam

    ReplyDelete
  4. NET EXAM PASSED panninavonga velai elloma roadla nikkarom ennum exam vatchi enna prayojanam

    ReplyDelete
  5. ஆசிரியர் கல்லூரில் தகுதி வாய்ந்த பேராசிரியர் இல்லாமல் நடக்கும் அவலம்உள்ளது.ஆசிரியர் பல்கழலைகழகம்

    ReplyDelete
  6. ஆசிரியர் கல்லூரில் தகுதி வாய்ந்த பேராசிரியர் இல்லாமல் நடக்கும் அவலம்உள்ளது.ஆசிரியர் பல்கழலைகழகம்

    ReplyDelete
  7. X,xii,ug,pg,bed,tet,-_passanavanga ellam thaguthyum irunthum velai illa.ithuku answer sollungada first. 3 years aguthu tet pass panni.

    ReplyDelete
  8. X,xii,ug,pg,bed,tet,-_passanavanga ellam thaguthyum irunthum velai illa.ithuku answer sollungada first. 3 years aguthu tet pass panni.

    ReplyDelete
  9. X,xii,ug,pg,bed,tet,-_passanavanga ellam thaguthyum irunthum velai illa.ithuku answer sollungada first. 3 years aguthu tet pass panni.

    ReplyDelete
  10. TET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இனி வரும் காலங்களில்

    அனைத்து அரசுத்தேர்வுகளையும் அப்ளை செய்ய தகுதி இருக்கிறதா என்று சோதிக்க ஒரு தேர்வு

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய உங்களுக்கு தகுதி இருக்கிறதா அதுக்கு ஒரு தேர்வு

    குடியிருப்பு,சாதி சான்றிதழ் வாங்க வேண்டுமென்றால் அதுக்கு ஒரு தேர்வு

    சான்றிதழ் சரிபார்ப்பின் போது அந்த சான்றிதழ் உங்களுடையதுதானா என்பதை சோதிக்க ஒரு தேர்வு எழுத வேண்டும்.

    வேலையெல்லாம் கிடைத்த பிறகு பள்ளியில் சேரும்பொழுது அந்த நபர் நீங்கள் தானா என்பதற்கு ஒரு தேர்வு

    பாடம் நடத்தும் பொழுது சரியாக பாடம் நடத்துவதை சோதிக்க ஒரு தேர்வு

    மாணவர்களுக்கு தேர்வு வைக்கிறீர்களா முதலில் உங்களுக்கு அந்த விடைகள் தெரியுமா என்பதை சோதிக்க ஒரு தேர்வு

    இடமாறுதல் வேண்டுமா அதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா அதற்கு ஒரு தேர்வு

    லோன் அப்ளை செய்ய ஒரு தகுதித்தேர்வு

    போராட்டம் செய்ய வேண்டுமா ஒரு தகுதித்தேர்வு எழுதி தேர்வடைந்தவர்கள் மட்டும் போராடனும்

    ஓய்வு பெற்றபின் ஓய்வூதியம் வேண்டுமா அதுக்கு ஒரு தகுதித் தேர்வு எழுதினாதான் கிடைக்கும்.
    இது எல்லாமும் வருங்காலத்தில் மத்திய அரசோ மாநில அரசோ கொண்டு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  13. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY
    TRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
    தேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
    கடந்த TRB-2015 தேர்வில் எமது மாணவிகள் RAJA KUMARI –ZOOLOGY மற்றும் MARY JAYANTHI- PHYSICS-ல் TAMIL NADU அளவில் முறையே 36-வது மற்றும் 17-வது இடத்திலும் கன்னியாகுமாரி மாவட்ட அளவில் இருவரும் முதல் இடத்திலும் வெற்றி பெற்று முதுகலை ஆசிரியராக பணி புரிகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. தகுதி தேர்வு தோ்ச்சிப்பெற்றவா்களை அனைவரையும் தொகுப்பூதியத்திலாவது அருகாமை பள்ளியிலேயே பணியமர்த்தி வயது மூப்பு அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் 3அல்லது 5 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யலாம் இந் அரசு அப்போதுதான் படித்த படிப்பு மறவாமலும் அதேசமயம் வீணாக இருக்கும் இந்த கல்வி அறிவு மாவர்களை சென்றடையும் நிறைய பள்ளிகள் இரண்டுஆசிரியர்களை கொண்டே
    அதுவும் ஓர் ஆசிரியர் விடுப்பெனில் ஒரே ஆசிாியர்தான் அரசே சிந்தித்து செயல்படவும்

    ReplyDelete
  16. sir 10 years ku private b.ed collage close pannuga .nan 50 laxam kattina kuda en perla collage open pana permision kudukum intha stade and centrle goverment, ithana per padichu vela ilama iruka karanam kanaku ilatha private clg, 0ru 10 yearsku close pannuga sir elarukum vela kidaikum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி