மருத்துவ மேற்படிப்பில் விதிமீறும் நிகர்நிலை பல்கலை. கலந்தாய்வு தொடங்கும் முன்பே மாணவர் சேர்க்கை: கட்டிய பணத்தை வாங்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2017

மருத்துவ மேற்படிப்பில் விதிமீறும் நிகர்நிலை பல்கலை. கலந்தாய்வு தொடங்கும் முன்பே மாணவர் சேர்க்கை: கட்டிய பணத்தை வாங்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்

மருத்துவப் பட்ட மேற்படிப்பு கலந் தாய்வு தொடங்குவதற்கு முன்பே பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தியிருப்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு 604 இடங் கள் உள்ளன. கடந்த ஆண்டு வரை அவர்களே மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மத்திய அரசின் உத்தரவுப்படி நீட் தேர்வு அடிப்படையில் தமிழக அரசே ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க் கையை நடத்துகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடந்தது. இதில் 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 451 இடங் கள் நிரப்பப்பட்டன. 153 இடங்கள் காலியாக உள்ளன.இந்த ஆண்டு தனியார் மருத் துவக் கல்லூரிகளில் பட்ட மேற் படிப்புகளுக்கான கல்விக் கட்ட ணத்தை ரூ.2.25 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை என நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் குழு நிர்ணயித்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான கட்ட ணம் ரூ.3 லட்சம் முதல் ரூ.60 லட் சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த பல்கலைக்கழகங் களின் கல்விக் கட்டண நிர்ணயக் குழுக்கள் நிர்ணயித்துள்ளன.இந்நிலையில், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடத் தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவரின் பெற்றோர் இதுகுறித்து கூறியதாவது: பிரபல நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் எனது மகனைச் சேர்க்க 2 மாதங் களுக்கு முன்பு சென்றேன். ரூ.30 லட்சம் கட்டச் சொன்னார்கள். அரசுதான் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் என்று எனக்கு அப்போது தெரியாது. அதனால், பணத்தைக் கட்டினேன்.இந்த நிலையில், அரசு நடத் தும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் வந்தது. அதிர்ச்சி அடைந்த நாங்கள் பல் கலைக்கழக நிர்வாகத்திடம் சென்று, கட்டிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். அவர்கள் மறுத்துவிட்டனர்.

‘கலந்தாய்வில் பங்கேற்று எங்கள் கல்லூரியையே தேர்வு செய்யுங்கள்’ என்றனர். அதேபோல செய்தோம். பணம் கட்டிய கல்லூரியிலேயே இடம் கிடைத்ததால்தப்பித்தோம்.எங்களைப் போல பலரும் ஏற் கெனவே பணம் கட்டியிருக்கின் றனர். அதில் பலருக்கு, பணம் கட்டிய கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. அதனால், வேறொரு பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த னர். பணம் கட்டிய பல்கலைக் கழகத்தில் இருந்து தொகையை திருப்பி வாங்கவும் முடியாமல், கலந்தாய்வில் தேர்வு செய்த பல்கலைக்கழகத்தில் கட்டணத்தை செலுத்தவும் முடியாமல் பல பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

நீதிமன்றம் செல்லலாம்

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோவிடம் கேட்டபோது, ‘‘இதுபற்றி பெற்றோர் தைரியமாக புகார் அளிக் கலாம். நீதிமன்றத்துக்கு சென்றால், அவர்கள் கட்டிய பணம் கட்டாயம் திரும்பக் கிடைக்கும்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி