எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2017

எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர்

மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவபடிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களைமாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.

2 comments:

  1. MPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
    * Practise questions available
    * 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
    * for details 9042071667

    ReplyDelete


  2. நீட் தேர்வின் நிலை மற்று காரணம்:

    1.முதலில் போட்டியிடும் தளம்/களம்அனைவருக்கும் சமமா என்பதை உணர வேண்டும்.
    (உயர் தட்டு (சாதி மற்றும் பொருளாதார நிலை)மக்களுக்கு எளிதாக்கும் முயற்சி தான் இது)

    2.பாடத்திட்டம் அனைவருக்கும் சமமா?..???
    (மாநிலத்திற்கு மாநிலம் வேறு)

    3.பொருளாதார பின்னணி அனைவருக்கும் சமமா??"
    (அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முக்கால்வாசி பேர் கஷ்ட நிலையில் இருப்பவர்கள் )

    4. அனைவருக்கும் கல்வி சமம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதா? ???

    (முதலில் சாதியமுறையை ஒழித்துவிட்டு கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலை வேண்டும் ) .

    இதை எதையும் செய்யாமல்

    உங்களுக்கு வசதியாக ஆக்க வேண்டி

    உயர் சாதியில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக இலவசமாக மருத்துவம் படிக்க முடியவில்லை என்பதற்காக
    மட்டுமே
    இந்த நீட் தேர்வு
    வேறு எந்த சமநிலைக்கும் இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி