முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு ஒப்புதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2017

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு ஒப்புதல்!


தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.


மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், இதனை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும், அவை எதுவும் செயல்பாட்டிலில்லையென்றும் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் அரசின் உத்தரவின்படி நடத்த வேண்டிய மருத்துவ முகாம்கள் கூட சரியாக நடத்தபடுவது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் 16 மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 117 மருத்துவமனைகளுக்கு அவற்றின் செயல்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு  வருகின்றன.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி