40 ஆயிரம் பி.எட் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் வேலையின்றி தவிப்பு - கல்வியமைச்சர் கவனிப்பாரா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2017

40 ஆயிரம் பி.எட் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் வேலையின்றி தவிப்பு - கல்வியமைச்சர் கவனிப்பாரா


சென்னை: தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள், பகுதி நேரம் கூட வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்...
 பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் பாடத்தை மையமாக வைத்து அனைவருக்கும் இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு அச்சடித்த கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் கிடப்பில் போடப்பட்டன.

இதனால் மக்கள் வரிப்பணத்தில் ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்று வரை குடோன்களில் உள்ளன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எண்ணி அதிகளவில் படித்தனர்.

ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை மாறாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிப்ளமோ, பிசிஏ. மற்றும் 3 ஆண்டு படித்த ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாடம் சொல்லிக்கொடுக்க நியமிக்கப்பட்டனர்.

பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதனால் பி.எட். படித்த கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

 கடந்த 2006ம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடப்பிரிவு இல்லை. மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பி.எட் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கல்வியமைச்சருக்கு வைத்துள்ள கோரிக்கை :::

அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).

சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிடப்பட்ட (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வரை) கணினி அறிவியல் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

கடந்த 11ஆண்டுகளாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவிக்க வேண்டும். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.

கணினி அறிவியலை பயிற்றுவிக்க ஒப்பந்த ஊழியர்களை தேர்வு செய்யாமல் தகுதிவாய்ந்த பி.எட். பட்டதாரிகளை பணிநியமனம் செய்திட வேண்டும்.

கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்.

 அரசு பள்ளிகள் அனைத்திலும் (1ம் வகுப்பு முதல் - 12ம் வகுப்பு வரை) குறைந்த பட்சம் 20முதல் 40வரை கணினிகளைக் கொண்ட அதிநவீன கணினி ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும்.

எங்கும் கணினி எதிலும் கணினி என்று இருக்கும் காலகட்டத்தில் மாணவர்கள் கணினி கல்வியை நாளுக்கு நாள் அதிகமாக விரும்பி படிக்கின்றனர் ஆகையால் இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணினி அறிவியல் பாடத்தை உடனடியாக நடைமுரைபடுதவேண்டும்.

பி.எட் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 39019 பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீனயுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் அறிவியல் கல்வியை கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். மெட்ரிக், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது.

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2011 ஆம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வியில் 6,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள்மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் காரணம் ஏதுமின்றி அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. சில மாதத்தில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது. தற்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும்கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது.

?மேனிலைப்பள்ளிகள் (ம) தற்போது தரம் உயர்த்தப்படும் 800க்கும் மேற்பட்ட மேனிலைப்பள்ளிகளில் பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு இல்லை . கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும் .பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை. உலகமே கணினி மயமாக மாறிக்கொண்டு வரும் காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும்.இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

மாணவர்களின் விகிதம் அடிப்படையில் கணினி ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும். கணினி இன்றியமையாத சூழலில் அரசு தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனே கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.

 அரசு பள்ளிகளில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மட்டும் கொடுத்தால் போதாது. 6 முதல் 12 வரை மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும்.

கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது கல்வியமைச்சர் 41 அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். முக்கியமாக 6 முதல் 10 வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்து இணைப்பு புத்தகம் கொடுக்கப்பபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கணினி பட்டதாரி பயின்ற தங்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாகும்.

2 comments:

  1. Please look into the priority our computer science teacher department

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி