அண்ணா பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் அரசு பிரதிநிதியாக சுந்தரதேவன் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2017

அண்ணா பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழுவில் அரசு பிரதிநிதியாக சுந்தரதேவன் நியமனம்

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.சுந்தரதேவன் நியமிக்கப் பட்டுள்ளார்.தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவை அனைத்தும் தொழில்நுட்ப பல் கலைக்கழகமான அண்ணா பல் கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பல் கலைக்கழகத் துணைவேந்த ராக இருந்த எம்.ராஜாராமின்பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதம் 26-ம் தேதியுடன் நிறை வடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர் எம்.பாஸ்கரன் தலைமையில் தமிழக அரசு ஒரு தேர்வுக் குழுவை அமைத்தது. ஆனால், அந்த தேர்வுக்குழு பரிந்துரை செய்த 3 பேர் அடங்கிய பட்டியலை பல்கலைக்கழக வேந்த ரான ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துவிட்டார்.வழக்கமாக, துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் ஆளுநர் சார்பில் ஒருவர், பல் கலைக்கழக சிண்டிகேட் சார்பில் ஒருவர், தமிழக அரசு சார்பில் ஒருவர் என 3 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். ஆளுநரால் நிய மிக்கப்படும் உறுப்பினர், தேர்வுக் குழுவின் அமைப்பாளராக இருப் பார். இதில் மாற்றம் செய்யும் வகையில் தமிழ்நாடு பல்கலைக் கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, துணைவேந்தர் தேர்வுக் குழுவில், ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழக அரசு பிரதிநிதி, கல்வியாளர் ஆகியோர் இடம்பெற வேண்டும்.

அதன் அடிப்படையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவில் ஆளுநர் சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சி. லோதாவும் பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் கே.அனந்த பத்மநாபனும் ஏற்கெனவே நிய மிக்கப்பட்டனர். ஆனால், தமிழக அரசின் பிரதிநிதி பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ்அதி காரியும் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செய லாளருமான என்.சுந்தரதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் ஜூன் 16-ம் தேதி வெளி யிட்டிருக்கிறார். இந்த தேர்வுக் குழு, அண்ணா பல்லைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 3 நபர் களை பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் ஒருவரை ஆளுநர், துணைவேந்தராக நிய மிப்பார் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி