பேரூராட்சி பணியாளர் சங்கம் எதிர்ப்பு - ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2017

பேரூராட்சி பணியாளர் சங்கம் எதிர்ப்பு - ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த கூடாது.

4 comments:

  1. எந்த அரசு மருத்துவ கல்லூரியும் கேட்கவில்லை அரசு பணியாளர்களின் குழந்தைகளை ஆயினும் அங்கே அட்மிசன் கிடைக்குமா? என்று ஏங்குகிறான்.....

    எந்த அரசு பொறியியல் கல்லூரியும் கேட்கவில்லை அரசு பணியாளர்களின் குழந்தைகளை ஆயினும் அங்கே அட்மிசன் கிடைக்குமா? என்று ஏங்குகிறான்.....

    எந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் கேட்கவில்லை அரசு பணியாளர்களின் குழந்தைகளை ஆயினும் அங்கே அட்மிசன் கிடைக்குமா? என்று ஏங்குகிறான்.....

    ஏன் பள்ளிகளில் மட்டும் அட்மிசன் கேட்க தயங்குகிறான் அரசு ஊழியன்.... அரசு ஊழியன் மட்டுமல்ல, கூலி வேலை செய்யும் அடிமட்ட மக்களும் தான்.....

    என்ன காரணம்? சிந்தித்ததுண்டா?......
    அரசு பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் இல்லையா?..............
    அரசு பள்ளியில் சிறந்த பாடத்திட்டம் இல்லையா?..............
    அரசு பள்ளியில் சிறந்த பயிற்சி அளிக்கப்படவில்லையா?.......
    இல்லை...குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உழைக்க விரும்பவில்லையா?......
    அல்லது சிறந்த நிர்வாகத் திறன் உள்ளோர் இல்லையா?......

    இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அனைவரின் பதிலும் கண்டிப்பாக "அனைத்தும் சரியாகத்தான் இருக்கிறது" என்று சொல்வார்கள் நானும் மறுக்கப்போவதும் இல்லை....

    அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் இவை அனைத்தும் உண்டா என்று கேட்க வேண்டும் அல்லவா... அதற்கு பதில் "கொஞ்சம் தயங்கித்தான் சொல்ல வேண்டும் சரியாக இருக்கலாம் என்று"....

    அப்போ... தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையில் உள்ள வித்தியசம் என்ன? என்ன? என்ன?

    ஏன் தயக்கம் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க?.....

    ஒரே ஒரு வித்தியாசம் தான்.....


    அது...."அடிப்படை வசதி மட்டுமே"
    சரியான இட வசதி...
    சரியான கட்டிட வசதி...
    சரியான பாத்ரூம் வசதி...
    சரியான சுற்று சூழல்...
    சரியான போக்குவரத்து வசதி...

    ஒவ்வொரு வரின் தயக்கத்திற்கு காரணம் இவைகளே...

    தனியார் பள்ளிகளில் இவைகளை காண்பித்தே அட்மிசனை பெருக்குகிறார்கள்...

    அடிப்படை வசதிகளை பெருக்குங்கள்....

    அனைவரும்...
    அரசு மருத்துவ கல்லூரிபோல...
    அரசு பொறியியல் கல்லூரிபோல...
    அரசு பாலிடெக்னிக் கல்லூரிபோல...
    ....
    அரசு பள்ளிகளுக்கும் அனைவரும் முன்னுரிமை அளிப்பார்கள்...

    ReplyDelete
  2. மேற்கண்டவாறு அடிப்படை வசதிகளை செய்து தனியாரின் கட்டமைப்புக்கு மாற்றினால்....

    என்ன நடக்கும் என்பதை கொஞசம் தயங்கித் தான் சொல்கிறேன்....

    அனைத்து அரசு பணியளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பார்கள்.

    அனைத்து அரசியல் வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பார்கள்.

    அனைத்து செல்வந்தர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பார்கள்.

    அனைத்து வசதிகளும் உண்டு, கட்டணம் கிடையாது, ஆகவே அனைவரின் கவணமும் அங்கே செல்லும் அப்போ

    ஏழைகளின் பிள்ளைகள் அங்கிருந்தும் துரத்தப்படுவார்களோ... என்றும் கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது...

    இவை அனைத்தும் மாற வேண்டுமெனில்...

    ஒரே வழி

    அரசு மட்டுமே கள்விக்கூடங்களை நடத்த வேண்டும்....
    தனியார் மயம் இருக்கக் கூடாது என்பதே என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. NETTHIYADI BATHIL SIR .ARUMAIYANA EXPLANATION.ITHUKKU ENTHA GOVT STAFFNA BATHIL SOLLUNGA PAARPOM????????????

      Delete
  3. Exactly correct sir.. govt should give concern on education and on basic facilities in schools..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி