துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2017

துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை

தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம் கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி விபரங்கள் கேட்டு பதிவு செய்யப்பட்டன. சமீபகாலமாக பள்ளி கல்வித் துறையில் பல வகையான மாறுதல்கள் நடந்து வருகின்றன.பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை மாற்றம், இறைவழிபாட்டு முறையில் மாற்றம், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் மாற்றம், டிஜிட்டல் வருகை பதிவேடு பராமரிப்பு என தினமும் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.இந்நிலையில் துவக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வரும் பெற்றோரிடம், பள்ளி நிர்வாகம் ஜாதி விபரங்களை கேட்கக் கூடாது. அதேநேரம் பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரங்களை பதிவு செய்யலாம் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கல்வித் துறையின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.இதன் மூலம் சமதர்ம சமுதாயம் உருவாகும். சமச்சீர் கல்வி சாத்தியமாகும் என்றார்.

2 comments:

  1. then asking community wise students admission details and so on

    ReplyDelete
  2. வேலை வாய்ப்பில் 5% இடஒதுக்கீடு சொல்லுங்க யாரும் சா(தீ)தி சொல்ல மாட்டாங்க????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி