"அரசுப் பள்ளியில் படிக்கிறேன்னு சந்தோஷமா சொல்லு!" மகளுக்கு அப்பாவின் நம்பிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2017

"அரசுப் பள்ளியில் படிக்கிறேன்னு சந்தோஷமா சொல்லு!" மகளுக்கு அப்பாவின் நம்பிக்கை!


தனியார் பள்ளியில் அட்மிஷன் கிடைக்கவில்லை, கட்டணம் அதிகமாக இருக்கிறது... எனப் பல காரணங்களால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழல் பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு.
தனியார் பள்ளியில் சேரப்போகிறோம் எனும் ஆசையில் இருக்கும் பிள்ளைகள் அரசுப் பள்ளி என்றதும் சோர்ந்துவிடுவார்கள். அப்படித்தான் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பூங்குழலியும் சுணக்கமானார்.

பூங்குழலியின் அப்பா மருதுபாண்டியனுக்கு இது தெரியவந்தது. உடனே அவர் தன் மகளுக்கு புதிய நம்பிக்கையும் கொடுத்தார். அது குறித்து அவரிடம் பேசினோம்.(மேலே உள்ள படத்தில்: மருதுபாண்டியன் மற்றும் பூங்குழலி)"நான் சொந்தமாக பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். நானும் என் மனைவியும் அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். நல்லாத்தான் இருக்கோம். எங்களோட மூத்த மகள் பூங்குழலி, தனியார் பள்ளியிலதான் படிச்சா. ஸ்கூலுக்குப் போகனும்னா காலையில ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்ல ரெடியா இருக்கணும். அப்படின்னா எத்தனை மணிக்கு எழுந்திருச்சி, தயாராகணும்னு பார்த்துக்கோங்க... அதே போல சாயந்தரம் அவ வர்றதுக்கு ஐந்தரை, ஆறு மணியாயிடும்.

ரொம்ப டயர்டாத்தான் வருவா. அப்பறம் ஹோம் வொர்க்கும் நிறைய தந்திருப்பாங்க. அதையெல்லாம் முடிச்சிட்டு தூங்கத்தான் நேரம் இருக்கும்.பூங்குழலி மேடையில நல்லா பேசுவா. நிறைய போட்டிகளில் கலந்துப்பா. நாள் முழுக்க பிஸியாகவே இருந்தா கலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது இல்லையா... அவளுக்கு விருப்பமான விஷயங்களையும் செஞ்சாதானே ஸ்கூலேயும் சந்தோஷமா இருப்பா. அதனாலதான் எங்க ஊரு அரசுப் பள்ளியிலேயே சேர்த்துட்டேன். இந்தப்பள்ளி எங்க வீட்டுலேருந்து நடந்து போற தூரம்தான். அதனால் நிறைய நேரம் கிடைக்கும். அரசுப் பள்ளியில சேர்க்கப்போறதை முதலில் என் மனைவிகிட்ட சொல்லி புரியவைச்சேன். பிறகு, பூங்குழலியிடம் சொன்னேன்.

அவ 'ஓகே'னு சொன்னப்பறம்தான் இந்தப் பள்ளியில சேர்த்தேன். எங்களோட இரண்டாவது பொண்ணு கயல்விழி இந்த வருஷம் தனியார் பள்ளியில அஞ்சாவது படிக்கிறா. அவளையும் அடுத்த வருஷம் பூங்குழலி படிக்கிற பள்ளியிலேயே சேர்க்கப்போறேன்.முதல் நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்த பூங்குழலியிடம் 'ஸ்கூல் எப்படி இருக்கு'னு கேட்டேன். 'நல்லா இருக்குப்பா, ஆனா டாய்லெட்தான் சுத்தமாக இல்லை.

மத்தப்படி சூப்பரா இருக்கு'னு சொன்னாள். 'சரி, உனக்கு நிஜமாகவே இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா'னு கேட்டேன். அவள் தயங்கிட்டே, 'பிடிச்சிருக்குப்பா, ஆனா,யாராவது எங்க படிக்கிறனு கேட்டா, ஃபேமஸான ஸ்கூலில் படிச்சிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேனு சொல்றதுக்கு கூச்சமாக இருக்குப்பா'னு சொன்னாள்.அவளோட பிரச்னையைப் புரிஞ்சிகிட்டேன். 'நீ நினைக்கிறது தப்பில்ல, ஏன்னா, பிரைவேட் ஸ்கூலில் படிக்கிறதுதான் பெருமையான விஷயம்னு எல்லார் மனசுலேயும் இருக்கு.

அதுதான் தப்பு. இப்ப கவர்மென்ட் காலேஜ்ல டாக்டருக்கு படிக்கிறதுக்கு சீட் கிடைச்சா கூச்சப்படுவியா?னு கேட்டேன். அவள் இல்லைனு தலையாட்டினாள். 'சரி, கவர்மெண்ட் ஆபிஸில் வேலை கிடைச்சா அதை மத்தவங்க கிட்ட சொல்லும்போது கூச்சப்படுவியா'னு கேட்டேன். அதற்கு அவள், 'இல்லப்பா சந்தோஷமா சொல்லுவேனு' சொன்னாள். 'அதுபோலத்தான் குழலி இது. கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதையும் சந்தோஷமா சொல்லு. யாராவது உங்கிட்ட கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதைப் பத்தி நக்கலாக விசாரிச்சா, உங்களுக்கு கவர்மென்ட் வேலைக் கிடைச்சாலும் இப்படித்தான் நினைப்பீங்களானு தைரியமா கேளு'னு சொன்னேன். அவளும் சிரிச்சிகிட்டே 'சரி'னு சொன்னாள்.

பிரைவேட் ஸ்கூலில் பீஸ் கட்டலைனா வெளியில நிற்க வெச்சிடுவாங்க. அரசுப் பள்ளியில அப்படி இல்ல, புத்தகம், யூனிஃபார்ம்னு எல்லாம் கிடைக்கும். வசதி இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எல்லார் வீட்டிலேருந்து பிள்ளைகள் வருவாங்க. நல்லா பழகுவாங்க. நீயும் அவங்களோடு சந்தோஷமாப் பழகு. டீச்சரைப் பார்த்து பயப்படாமல் பேசு. இன்னைக்கு பெரிய வேலையில இருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர் அரசுப் பள்ளியில படிச்சவங்கதாம்.

அதனால அரசுப் பள்ளியில படிக்கிறதுல எந்தக் கூச்சமும் படாதே. உங்கூட படிக்கிற புள்ளைங்க யாராவது, அப்படி நினைச்சா நான் சொன்னதையெல்லாம் சொல்லு'னு முடிச்சப்ப, பூங்குழலி தெளிவாகிட்டாள். " என்றார் மருது பாண்டியன்.புதிதாக சேர்ந்த பள்ளிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தபூங்குழலியிடம் பேசினோம். "இந்த ஸ்கூல் எனக்குப் பிடிச்சிருக்கு அங்கிள். அந்த ஸ்கூலுக்கு போகும்போதுகாலையில ஆறு மணிக்கு எழுந்திருப்பேன். அவசரம் அவசரமாக கெளம்புவேன். இப்பவும் ஆறு மணிக்குத்தான் எழுந்திருக்கிறேன். மெதுவாக, ரிலாக்ஸா கெளம்பறேன்.

நானே நடந்து ஸ்கூலுக்குப் போயிடுறேனு சொன்னேன். அப்பாதான் ஒரு வாரம் மட்டும் நானே கொண்டு வந்து விடுறேனு சொன்னாங்க. ரெண்டே நாள்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ்கிடைச்சிட்டாங்க." என உற்சாகமாகச் சொல்கிறார்.அரசுப் பள்ளி என்பது நமது அரசு நடத்தும் பள்ளி எனும் உணர்வு வந்தாலே இந்தக் கூச்சம் விலகிவிடும். தன் மகளுக்கு மிகச் சரியாக வழிகாட்டும் அப்பாவுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

25 comments:

  1. Physics sc community vaccancy iruka sir this year

    ReplyDelete
  2. Physics sc community vaccancy iruka sir this year

    ReplyDelete
  3. Maruthupandian sir very good my wife is a government teacher we also have joined our daughter in government school in tamil medium last year.

    ReplyDelete
  4. நானும் 490 எடுத்த என் மகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர்த்தேன் . பலரும் என் மகள் வாழ்க்கையை நான் வீணக்கியதாக கடிந்துகொண்டனர். தற்போது பள்ளி நன்றாகஉள்ளது ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் முடித்து விட்டு நேற்று 15 மாணவியர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார், மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. Mr.maruthupadian vazhithukal......

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் திரு மருதுபாண்டியன்

    ReplyDelete

  7. வாழ்த்துக்கள் திரு மருதுபாண்டியன் மற்றும் பூங்குழலி.

    ReplyDelete
  8. Mr.maruthupandiyan sir you are a good citizen.. Congratulations

    ReplyDelete
  9. Mr.maruthupandiyan sir you are a good citizen.. Congratulations

    ReplyDelete
  10. sir your thought is super ..........

    ReplyDelete
  11. முன் உதாரணமாக திகழும்
    பூங்குழலிக்கும், அவரது தந்தை மருதுபாண்டியன் அவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Sad thing his government school teachers themself admitting their children in private schools.. but Your a pioneer and inspiration to many parents sir..

    ReplyDelete
  13. ovvoru parent um ippadi think pannina nalla irukkum.

    ReplyDelete
  14. Super sir... ellorukum gov't school la thangaloda pillaigala podanumnu asai paduvanga... but mathavanga ena nenaipargalo endru payanthu perumaikaga private school la pottutu fees kata mudiyama thinaruvargal.... but u did the great job

    ReplyDelete
  15. I am sg teacher in govt school. I admitted my daughter in pums school vengamedu where i appointed .

    ReplyDelete
  16. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY

    ReplyDelete
  17. நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.இன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகின்றேன்.

    ReplyDelete
  18. நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.இன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகின்றேன்.

    ReplyDelete
  19. Very nice to hear this from a father. I think govt should take complete attention on govt schools admission.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி