அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடத்தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2017

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடத்தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்பு

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாஅவர்கள் கல்லூரி ஆசிரியர்பணியிடத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம்[TRB] மூலம் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய உள்ளதாக,110விதியின்கீழ் அறிவித்திருந்தார்’.

அதற்கான அரசு ஆணை வெளிவராத காரணத்தால் பழைய வெய்டேஜ் முறையே இன்று வரை பின்பற்றப்படுகிறது.

தற்போது உள்ள தேர்வு முறை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடம் தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியமான (TRB) மூலமாககீழ்காணும்(Weightage and Interview) முறை பின்பற்றி, பணியாளர்கள்தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Mode of Selection



1
For Teaching experience in Universities / Government / aided colleges / Self-financing colleges in the approved post including the Teaching experience (in the relevant subject) of the candidates in Medical/Engineering/Law Colleges.
(2 marks for each year subject to a maximum of 15 marks)
Maximum Marks

15 marks


2
Qualification




9 Marks
(a)  For Ph.D in concerned subject
9
(b)  For M.Phil with SLET/NET
6
   (c) For PG&SLET/NET
5
3
Interview
10 Marks
                                   TOTAL
34 Marks

Ø  இந்த தேர்வு முறை சீனியாரிட்டி முறையை ஒத்திருக்கிறது. தனியார் கல்லூரிகளில் நீண்ட காலம் பணிபுரிந்த மூத்தோர் மட்டுமே பணியில் சேர முடியும்.
Ø  உதவி பேராசிரியர் தகுதி தேர்வான NET/SET மற்றும் ஆராய்ச்சி படிப்பான PhD முடித்து பணியில் சேரும் கனவில் இருக்கும், திறமையும், துடிப்பும் மிக்க இளைகர்களின் கனவு கரைந்தே போகிறது.
Ø  அம்மா அவர்களின் நல்ஆட்சியில் இருந்தபோட்டி தேர்வு முறையை ரத்து செய்து, தற்போது உள்ள தேர்வு முறை கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை பின்பற்றப்படுகிறது.
Ø  தற்போது, ஒவ்வொரு பாடத்திலும் பல ஆயிரம் பேர் NET/SET மற்றும் PhD தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளனர். உதவி பேராசிரியர் தகுதி பெற்ற அவர்கள் அனைவரும் வெறுமனே விண்ணப்பம் செய்ய மட்டுமே முடியும். அவர்களால் அடுத்த நிலைக்கு செல்ல இந்த வெய்டேஜ் முறை பெரும் முட்டுக்கட்டை ஆகவும், தடுப்பு சுவராகவும் அமைகிறது. இதனால் தகுதி வாய்ந்த அவர்களின் கனவுகள் தகர்க்கப்பட்டு தவிடுபொடி ஆக்கப்படுகிறது.
Ø  இந்த தேர்வு முறையால் எங்களால்எங்கள் வாழ்நாளில் பணி பெற வாய்ப்பே இல்லை.

எங்கள் கோரிக்கை

Ø  NET/SET/SLET/PhD தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கிடையே, அம்மாவின் நல்லாட்சியில் இருந்த பழைய போட்டி தேர்வு முறையில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் கல்வி தகுதிக்கேற்ப வெயட்டேஜ் மதிப்பெண் சேர்த்து பணி நியமனம் செய்ய வேண்டும்.
[இந்த முறையே TRB யால் நடத்த பெரும் அனைத்து போட்டி தேர்வுக்கும் பின்பற்றப்படுகிறது]

Ø  அதற்கான அரசு ஆணை பிறப்பித்து அனைவரும் தேர்வில் பங்கு பெற சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தபெறும் மற்ற பணியிடங்கள்

1.       பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் போட்டி தேர்வு.
2.      அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்கநர் போட்டி தேர்வு
3.       பாலிடெக்னிக் கல்லூரிவிரிவுரையாளர் போட்டி தேர்வு.
4.       சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு
5.       DIET கல்லூரி விரிவுரையாளர்போட்டி தேர்வு.
6.       முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு.
7.       பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு
8.       இடைநிலை ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு
9.       சிறப்பு ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு
10.    ஆய்வக உதவியாளர் போட்டி தேர்வு
11.    இளநிலை உதவியாளர் போட்டி தேர்வு

என மேலும் பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Ø  மேற்கண்ட அனைத்து தேர்வுகளிலும் தகுதியானஅனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Ø  கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தப்படாமல், வெய்ட்டேஜ் ஒன்றை மட்டும் வைத்து பணி நியமனம் செய்யப்படும் ஒரே பணியிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிபேராசிரியர் பணி மட்டுமே.

Ø  உயர் கல்வி துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கானஉதவிபேராசிரியர் பணியிடத்திற்கு போட்டி தேர்வு இல்லாததால் பல ஆயிரம் தகுதி வாய்ந்த நபர்கள்பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
Ø  தங்கள் தலைமையிலான தமிழக உயர் கல்வி துறை உயர் கல்வியில் உலக தரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க இயலாத செய்தியாகும்.
Ø  தரமான மாணவர்கள் உருவாக தரமான ஆசிரியர்கள் தேவை. தரம் என்பது போட்டி தேர்வு மூலமே கண்டறியப்படும் என்பதை பல எடுத்துகாட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Ø  போட்டி தேர்வு மூலம் உதவிபேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் தனித்திறமைகளைக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியும், கல்வியின் தரம் மேன்மேலும் உயரும்.

கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்கள், போட்டி தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது.தகுதி பெற்ற அனைவருக்கும் தேர்ச்சி சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.


TRB’s 2017 Annual Planner.

            ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] Annual Planner ஐ வெளியிட்டுள்ளது. அதில் வரும்ஜூலை நான்காம் வாரத்தில் [4nd week of JULY 2017], அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான 1883உதவிபேராசிரியர் பதவிக்கான அறிவிக்கை வெளியாகும் என்றும் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  வெயிட்டேஜ் முறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      எனவே, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க எதுவாக போட்டி தேர்வுநடத்தி பணியாளர்களைத்தேர்தேடுக்க வேண்டும். நீங்கள் உடனடியாக ஆணை வழங்கினால் மட்டுமே எங்களுக்கு கல்லூரிஉதவி பேராசிரியர் பணி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இல்லையேல் எங்கள் வாழ்க்கையில் பணியில் சேர வாய்ப்பே இல்லாமல் போகும்.

      தங்களது நல்ஆணைக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

                                                               NET/SET/SLET/PH.D முடித்த பட்டதாரிகள்,
                                                           அனைத்து மாவட்டங்கள்,
                                                                       தமிழ்நாடு.

41 comments:

  1. Good solution for many youngsters!All the best !

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Thank you for post this message sir

    ReplyDelete
  4. This letter alone won't do anything. To make it possible, media support and one week protest are needed. Net set candidates have to be gathered and have to meet the minister concerned.

    ReplyDelete
  5. This letter alone won't do anything. To make it possible, media support and one week protest are needed. Net set candidates have to be gathered and have to meet the minister concerned.

    ReplyDelete
  6. Please send this message to higher education minister and secretary

    ReplyDelete
  7. மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  8. We have to file a case in court reg this

    ReplyDelete
  9. நேர்முக தேர்வு மதிப்பெண்ணே பெரும்பாலும் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.எனவே மொத்த மதிப்பெண்ணில் 20% மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது 34 ல் 10 மதிப்பெண் வழங்குவதால் 30% மதிப்பெண் முறையை இரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  10. We will join our hands together to reach this message to the ears of Tamilnadu government to pass G.O for direct recruitment by TRB exam

    ReplyDelete
  11. நேர்முக தேர்வு மதிப்பெண்ணே பெரும்பாலும் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.எனவே மொத்த மதிப்பெண்ணில் 20% மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது 34 ல் 10 மதிப்பெண் வழங்குவதால் 30% மதிப்பெண் முறையை இரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  12. We will join our hands together to reach this message to the ears of Tamilnadu government to pass G.O for direct recruitment by TRB exam

    ReplyDelete
  13. S,This message really true, Government should consider this.

    ReplyDelete
  14. Only interview mark can be replaced with test mark. Pure test means it is injustice to those who already working towards arts college job. In test, it is natural that freshers can perform better. It is cruelity against who are working self finance colleges, completed PhD and net or set.

    ReplyDelete
    Replies
    1. sure sir. that is our request too. weightage must be given for experience also. but not only for experien ce

      Delete
  15. I agree that statement. We are request to our tn government pls realize for our next generation t

    ReplyDelete
  16. In present mode of recruitment, interview (i.e) money determines selection for the post. It is better to make selection by TRB Exam and weightage without interview.

    ReplyDelete
  17. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் மதிப்பிற்குரிய அட்மின் அவர்களே

    ReplyDelete
  18. Follow this link to join Arts and Science - TRB WhatsApp group: https://chat.whatsapp.com/2150Z60akIb4CGSTZJz0i0

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. To join Arts and Science - TRB WhatsApp group, kindly send your WhatsApp number to 9884917775

    ReplyDelete
  21. wrong method this , all are qualify at the same time anubavame asaan! u are understant

    ReplyDelete
    Replies
    1. Exam is Best because chances to be given for all uniformly

      Delete
  22. UGC GIVEN SELECTION MINIMUM STD FOR ASSISTANT PROFESSOR RECRUITMENT. WHY DO YOU ASK TEST. PLEASE VIEW UGC WEBSITE.

    ReplyDelete
  23. What is the need of set or net.

    ReplyDelete
  24. Wonderful suggestion... I will support this...

    ReplyDelete
    Replies
    1. Set / Net/ PhD is enough for recruitment. No need for further examination. View UGC WEBSITE.

      Delete
    2. Sir, Not only Set,Net,Ph.d are enough but also money and so we need change of recruitment mode

      Delete
  25. Yes, recruitment mode should be modified. Competitive exam is the only way...

    ReplyDelete
  26. Super sir clg trb exam nadathi merit candidates gu job podunga qualify professors studentku kidaiponga net exam pass panrathey posting pothu sir govt kavanathugu kondu ponga sir ethu nadanthal kastapAttu net pass panna niraya poor family vala mudiyum.

    ReplyDelete
  27. Super sir clg trb exam nadathi merit candidates gu job podunga qualify professors studentku kidaiponga net exam pass panrathey posting pothu sir govt kavanathugu kondu ponga sir ethu nadanthal kastapAttu net pass panna niraya poor family vala mudiyum.

    ReplyDelete
  28. NET EXAM PASSED panni 4 years aguthu posting Podala . Job merit padi kidacha youngsters family vala nalla mudivu kidaganun

    ReplyDelete
  29. NET EXAM PASSED panni 4 years aguthu posting Podala . Job merit padi kidacha youngsters family vala nalla mudivu kidaganun

    ReplyDelete
    Replies
    1. It is true. Now lot of candidates qualified for Net,slet in all subjects.so here after exam is correct because chance givenfor all uniformly not only experience.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி