காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2019

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-

நாமும் தெரிந்துகொள்வோம்


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.



3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.


43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்குஇலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.

81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.

83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோதுதடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு.

100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்தஊரில்என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்முக்கியமானவர் என்பதெல்லாம்அவருக்குத்தெரியும்.

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.

104. சொல்லும் செயலும் ஒன்றாகஇல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப்பெற்றிருந்தார்.அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனைமணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொருதிட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கானவேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.

58 comments:

  1. One of the great man!!! Makalukaga valrathuthan elarumey virumpuvanga!!! Opposite aatchi pathi pesuratha niruthidu thanoda aatchi sathanaiya kondu vanga!!! Athuvey tha orey discuss ah pogura mathiri iruku!!! Sattasapaila evolo core veen panringa! !! All people money thana!!! Unga kaaau podu oru nal pongalen! !!

    ReplyDelete
  2. Very very rare to see this kind of person in politics.....he lived for the peoples welfrare

    ReplyDelete
  3. he is my hero .ithu namaku perumai .intha arasial porompoku naikal ithil 10% yavathu follow pannugkada kamarasar anda boomi ithu avarpera kedukathinga.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. All in one word ""கர்ம வீரர்""

    ReplyDelete
  6. Legend,
    He is not man, He is a God.

    ReplyDelete
  7. இந்த மாதிரி ஒரு தலைவரை பெறாத நாம் அதிர்ஷ்டம் கெட்டவர்கள் தான்.

    ReplyDelete
  8. Symbol of simplicity ...he i a master of indian constitution

    ReplyDelete
  9. Symbol of simplicity ...he i a master of indian constitution

    ReplyDelete
  10. This article must read by all students.

    ReplyDelete
  11. A real leader of public. King maker of Indian politics. Spent more and plan more to converting the illiterates as literates,,,,,

    ReplyDelete
  12. Post in Chennai.bt assistant science(SC canditates only).tet completed person only.with in a week joining.contact no:866788101

    ReplyDelete
  13. Post in Chennai.bt assistant science(SC canditates only).tet completed person only.with in a week joining.contact no:866788101

    ReplyDelete
  14. அர்புதம்..... மற்றவரை விழப்பில் ஆழ்த்தியவர்....

    ReplyDelete
  15. அன்று அவரை தமிழக மக்கள் தோற்கடித்ததன் விளைவு தான் இன்று இந்த கொடுமை எல்லாம். அன்றைய சாபம் இன்றைய பாவம்.

    ReplyDelete
  16. அனைத்து மக்களுக்கும் சரியான தலைவர் ஐயா காமராஜர் அவர்கள்.தலை வணங்குகின்றேன் ஐயா..இவருக்கு பிறகு யாரும் சிறப்பான ஆட்சி செய்ததாக தெரியவில்லை.தற்போது மக்களுக்கு தேவையானதை விட தேவையற்றதையே இந்த அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கின்றது.நல்ல திட்டங்களையும்,தொலைநொக்கு பார்வையும் கொண்ட தலைவனை தேர்ந்தெடுத்தால் மட்டுமே தமிழகம் உருப்படும்...

    ReplyDelete
  17. நான் தலைவணங்குகிறேன்.மிகச்சிறந்த மனிதர்.எல்லோருக்கும் ஒரு முன் மாதிரி

    ReplyDelete
  18. மக்களுக்காக உழைத்த உன்மையான தலைவர்

    ReplyDelete
  19. அவர் காலத்தில் வாழ முடியவில்லை என்றாலும்,அவர் பற்றி படிப்பது பெருமையாக உள்ளது.இது மாதிரி தலைவர் இப்போ இருந்தா நல்ல இருக்கும், ஆனால் ....

    ReplyDelete
  20. Friends next pg 2019 calfore ,next list varum pg wait

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. Yes suraya sir ,3 monthukula poduvanga

    ReplyDelete
  22. நான் தலைவணங்குகிறேன்.மிகச்சிறந்த மனிதர்.எல்லோருக்கும் ஒரு முன் மாதிரி

    ReplyDelete
  23. நான் தலைவணங்குகிறேன்.மிகச்சிறந்த மனிதர்.எல்லோருக்கும் ஒரு முன் மாதிரி
    D Karunanithy

    ReplyDelete
  24. காமராஜர் பள்ளிகளை திறந்தார்.

    அப்படியானால் மூடியது யார்?

    .

    .
    .
    .
    .
    .
    குலக்கல்வி கொண்டு வந்த "ராஜாஜி"

    ReplyDelete
  25. If kamaragar was there I would have got transfer without giving brabe

    ReplyDelete
  26. Kamaraj world country number one beautiful man

    ReplyDelete
  27. Children in education number one welcome knowledge kamaraj very very good man

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி