உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல் கலைக்கழகம்அனுமதி அளித் துள்ளது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளங்கலை, முதுகலை படிப்பு கள், மற்றும் எம்பிஏ படிப்பில் இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் ஒரேயொரு பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010 முதல் உடனடி தேர்வை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மறுமதிப் பீடு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே உடனடி தேர்வு நடத்தப் படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப் பட்ட நிலையில், மறுநாள் (29-ம் தேதி) தகுதியுடைய மாணவர்களுக்கு உடனடி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் அநேகமாக ஆகஸ்டு 2-ம் தேதி வெளி யிடப்படலாம்.எனவே, பட்டப் படிப்பில் உடனடி தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் காலியிடங்கள் இருப்பின் முதுகலை படிப்பில் ஆகஸ்டு 4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள பல்கலைக்கழக துறைகளுக்கும், உறுப்பு கல்லூரி களுக்கும் அனுமதி அளிக்கப் படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

....
ReplyDelete