85% இடஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்த உயர் நீதிமன்றம் தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2017

85% இடஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்த உயர் நீதிமன்றம் தடை.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அர சாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தீர்ப்பு பிறப்பிக்கும் வரை தரவரிசைப்பட்டியலை வெளி யிடவோ அல்லது கலந்தாய்வை நடத்தவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலபாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கடந்த 22-ம் தேதி தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்தது.இதை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவரான தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி எம். ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கள், ‘‘கடந்த 2010-ம் ஆண்டு மருத் துவ மாணவர் சேர்க்கை தொடர் பாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட திருத்த விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி என்ற அடிப்படை யில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும். அகில இந்திய அளவில் ஒரே தேர்வு எனக் கூறிவிட்டு உள் இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதமானது” என்றனர்.இதை மறுத்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசாமி வாதிட்டதாவது: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத் தில் படித்த 4.20 லட்சம் பேரில் 84 ஆயிரம் பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதியுள்ளனர். 4 ஆயிரத்து 600 சிபிஎஸ்இ மாணவர்களில் 2 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

மாநில பாடத்திட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 250 சிபிஎஸ்இ பள்ளிகளும் நகர்ப்புறங்களில் தான் உள்ளன. ஒரு பள்ளிகூட கிராமப்புறங்களில் கிடையாது. ஆனால் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ள 50 சதவீத கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் கேட்கப் பட்டுள்ளது.எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக் கக்கோரி ஏற்கெனவே தமிழக அரசு இயற்றியுள்ள சட்டமசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ போன்ற பிறமொழி பாடத்திட்டங்களோடு சேர்த்துசமமாக மதிப்பீடு செய்ய முடி யாது. இந்த ஏற்றத்தாழ்வை களையவே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். அதுவரை தரவரிசைப் பட்டியலை வெளியிடவோ அல் லது கலந்தாய்வை நடத்தவோ கூடாது எனவும் உத்தரவிட்டு, தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி