தொடங்கியது பொதுப் பிரிவு பி.இ. கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2017

தொடங்கியது பொதுப் பிரிவு பி.இ. கலந்தாய்வு

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 9 பேர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். ஒருவர் மட்டும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இவர்களுக்கு உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.

பிளஸ் 2 தொழில் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் ஆகியோருக்கான பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு மொத்தம் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் உள்ளன. முதல் நாள் மட்டும் காலை 10 மணிக்கு சேர்க்கை தொடங்கப்பட்டது.

இதில், பட்டியலில் முதலிடம் பிடித்த தஞ்சையைச் சேர்ந்த பி.ஸ்ரீராம் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் துறையையும் இரண்டாம் இடம் பிடித்த எம். ஹரி விஷ்ணு, மின்னியல் மின்னணுவியல் துறையையும் மூன்றாம் இடம் பிடித்த வி.சாய்ராம், கணினி அறிவியல் துறையையும் தேர்வு செய்தனர்.
முதல் பத்து பேரில் 9 பேர் கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கை பெற்றுள்ளனர். பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்த வி.எஸ். பிரீத்தி மட்டும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் பிரிவைத் தேர்வு செய்தார்.

பொதுப் பிரிவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கடைசி கலந்தாய்வு மாலை 6 மணிக்குத் தொடங்கியது. திங்கள்கிழமையிலிருந்து (ஜூலை 24) முதல் பிரிவு சேர்க்கை காலை 7 மணிக்குத் தொடங்கி மொத்தம் 9 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. கடைசிப் பிரிவு இரவு 7 மணிக்குத் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி