கல்வி கொடுப்பது அரசின் கடமையென உத்தரவிடுவீர்களா நீதியரசரே!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2017

கல்வி கொடுப்பது அரசின் கடமையென உத்தரவிடுவீர்களா நீதியரசரே!!

32 comments:

  1. கல்வி கொடுப்பது அரசின் கடமையென உத்தரவிடுவீர்களா நீதியரசரே...
    இல.சண்முகசுந்தரம்

    ஆங்கில வழிக்கல்விக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளியொன்று தொடுத்த வழக்கில் அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்துஇருபது கேள்விகளை நீதியரசர் கேட்டிருக்கிறார். அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வேண்டுமெனும் நீதிமன்றத்தின் நோக்கம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும்.ஆனால், அரசுப்பள்ளிகளின் அவலநிலைக்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணமென்ற தொனியில் நீதிமன்றம் கூறியுள்ளது பிரச்சனையின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.

    ஆசிரியர்களை கட்டுப்படுத்தாவிட்டால் ஆண்டவரால் கூட அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்பதான புரிதலே நீதிமன்றத்தின் கேள்விகளை வாசிக்கையில் நமக்கு ஏற்படுகிறது.அதுதான் உண்மையா என்ன? அப்படியெனில் அரசின் கொள்கைகளுக்கும் அரசுப்பள்ளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? கேள்விகளும், சந்தேகங்களும் அலை அலையாய் எழுகின்றன.அரசுப்பள்ளி மாணவர்களின், பெற்றோர்களின், கல்வி ஆர்வலர்களின் சார்பாக எழும்எண்ணங்களை இதோ இருபது கோரிக்கைகளாய் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறோம்.

    1 கல்வி அடிப்படை உரிமையென்பதால் ஆசிரியர்களுக்குச் சங்கம் துவக்க அனுமதி அளிக்கக்கூடாதாம்.இரண்டு கருத்துக்கும் என்ன தொடர்பென்றே புரியவில்லை. கல்வி அடிப்படை உரிமையெனில், அரசு தானே அதை அனைவருக்கும் முழுமையாய் வழங்கிட வேண்டும். அதில் ஏன் தனியார் முதலாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்? காசுள்ளவனுக்கு ஒரு கல்வி,காசற்றவனுக்கு ஒரு கல்வி என அடிப்படை உரிமையே பாரபட்சமாய் வழங்கப்படுகிறதே, இது அநீதியல்லவா. கல்வியை அனைவருக்கும் சமமாய் வழங்கிட வேண்டும் என்றல்லவா நீதிமன்றம் தலையிடவேண்டும்.

    2 அனைவருக்கும் கல்வி வழங்குவதுஅரசின் அடிப்படைக் கடமையென்றாகிவிட்டபின்பு, அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க யாரும் ஏதும் செய்யவேண்டாம். அனைத்துப் பள்ளிகளும் அரசுப்பள்ளிகள் என்றாகிவிட்ட பின்பு, அமைச்சர் வீட்டுப்பிள்ளையும் அங்குதான் படிக்கும், நீதியரசர் வீட்டுக்குழந்தைகளும் அங்குதான் படிக்கும்.இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்று சிலர் சொல்லக்கூடும். அப்படியெனில், இப்படிச் செய்யலாம். ஆசிரியர்கள் வீட்டுக்குழந்தைகள் அரசுப்பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பும் நீதிமன்றத்தின் நோக்கம் சரிதான். ஆனால், அரசின் அங்கமாய் இருக்கும் அத்தனை பேரும், அதாவது அமைச்சர், நீதியரசர்கள், அதிகாரிகள் உள்பட அனைவர் வீட்டுக்குழந்தையும் அரசுப்பள்ளியில்தான் பயில வேண்டும், இவர்கள் யாருக்கும் கல்வி ஊதியம்(EDUCATIONAL ALLOWANCE) கிடையாது என உத்தரவிடுமா நீதிமன்றம்?

    3 கல்வி ஒரு வியாபாரப் பொருளா என்பதைநீதிமன்றம்தான் சட்டப்படி ஆய்வு செய்து சொல்லவேண்டும்.கல்வி ஒரு சேவை என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், எந்தக் கல்வி நிறுவனம்சேவை செய்துக்கொண்டிருக்கிறது? இலவசக்கல்வி தரும் ஒரு நிறுவனத்தையாவது நீதிமன்றத்தால் காட்டமுடியுமா? வேண்டாம். கோடிகளில் கொழிக்காத ஒரு கல்வி நிறுவனத்தையாவது காட்டமுடியுமா? அனைத்து தனியார் பள்ளிகளும் வரவு- செலவை அரசிடம் ஆண்டொரு முறை தாக்கல் செய்யவேண்டும். பொதுமக்கள் உள்ளடங்கிய பொதுத்தணிக்கைக்குழு அதை ஆய்வு செய்யும். அறக்கட்டளை மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையத்திற்கு அறக்கட்டளையே முழு நிதியையும் அளிக்கவேண்டும். மாணவர்களிடமிருந்து அரசு தீர்மானிக்கும் கட்டணத்தை மட்டும் வசூலித்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு பைசா கூட லாபம்ஏற்படக்கூடாது என உத்தரவிடுமா நீதிமன்றம்?

    ReplyDelete
  2. 4 லாபமே இல்லையென்றால் எந்தக் கல்வி வள்ளலும் கல்வி நிலையம் நடத்த முன்வரமாட்டார். அரசுப்பள்ளிகள் மோசம் என்ற பரப்புரையும் இனி இருக்காது. ஆம். அரசுப்பள்ளிகள் மோசமானவை, அங்கு படித்தால் வேலை கிடைக்காது. ஆங்கில அறிவு வராது என்பது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கிளப்பிவிட்ட கருத்துக்கள் அல்ல.மாணவர் சேர்க்கை வேண்டி பள்ளிக்கு வரும்பெற்றோரை ஆசிரியர்கள் தடுத்தார்கள் என எப்போதாவது கேள்விப்பட்டுள்ளோமா?அப்படியெனில் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளியை தேர்ந்தெடுக்கவில்லை? தங்களதுவிளம்பர யுக்திகள் மூலம் அரசுப்பள்ளிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது தனியார் கல்வி நிறுவன முதலாளிகள்தான். இன்றும்கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளிகள் அநேகம் இருக்கின்றன. அப்படியான பள்ளிகள் பட்டியல் அரசிடம் இருக்கிறதா? அந்தப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசுசெய்த சிறப்புத் திட்டங்கள் என்ன? கல்வியமைச்சருக்கு அந்தப்பள்ளிகள் குறித்து என்னதெரியும்? அது போல் தரமானதாக அடுத்தடுத்துபல பள்ளிகளையும் மாற்ற ஆலோசனை உள்ளதா என்றெல்லாம் நீதிமன்றம் கேட்டால் நிச்சயம் நன்மை நடக்கும்.

    5 தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா என ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நீதிமன்றம் சார்பாக நிச்சயம் தெரிவிக்கவேண்டும். அரசுப்பள்ளிகள் சீரழிந்து போனதற்கு அங்குள்ள ஆசிரியர்கள்தான் காரணமெனில், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு அங்குள்ள ஆசிரியர்களா காரணம்?

    6 ஆண்டவரால் கூட காப்பாற்ற முடியாதஅளவுக்கு அரசுப்பள்ளிகள் அத்தனைக் கேவலமாய் போய்விட்டதா என்ன? தனியார் பள்ளியால் வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கும் இடமளித்து கல்வியளிப்பது அரசுப்பள்ளிகள்தானே. தனியார் பள்ளிகள் தரம் வாய்ந்தவையெனில், அங்கேயே பலவருடம் படித்த மாணவர்களை தரமற்றவர்கள் என்று கூறி வெளியேற்றுவது ஏன்?அரசுப்பள்ளியில் படித்த பின்னர் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்களே, அப்படியெனில் யாருக்குத் தகுதியில்லை?

    7 இன்றும் தமிழகத்தின் சிறந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் மட்டும்தான் இருக்கிறார்கள். தனது சம்பளத்தை தனியார் பள்ளியின் வளர்ச்சிக்கு செலவழிக்கும் ஒரு ஆசிரியராவது ஒரு தனியார் பள்ளியிலாவது இருப்பாரா? ஆனால், தனது சம்பளத்தை மட்டுமல்ல, சொந்தப்பணத்தையும் அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்காக செலவழிக்கும் பலஆயிரம் ஆசிரியர்கள் இன்றும் அரசுப்பள்ளிகளில் மட்டும்தான் இருக்கிறார்கள். ஆனால்,இவர்களைஅரசு ஒரு போதும்கண்டுகொள்வதேயில்லை. இந்தப் பட்டியல்பல பத்திரிகைகளின் அலுவலகத்தில் இருக்கிறது. அரசிடம்இருக்கிறதா? கேட்கட்டும் நீதிமன்றம்.

    ReplyDelete
  3. 8 யோகா, சிலம்பு, நீச்சல் என தனிப்பயிற்சிகளை விளம்பரப்படுத்தி கல்லாகட்டும் தனியார் பள்ளிகளில் இவை பெரும்பாலும் முறையாக சொல்லித்தரப்படுவதில்லை. ஆனால், பெற்றோர்களுக்கு இதில் ஓர் ஈர்ப்பு இருக்கிறது. வகுப்பறைகளைத்தாண்டிய பன்முகப் பயிற்சிகளில் இன்றைக்கு ஆர்வமும், தேவையும் அதிகம். ஆனால், எத்தனை அரசுப்பள்ளிகளில் இப்படி தனிப்பயிற்சிக்கு அரசு திட்டம் தீட்டியுள்ளது என நீதியரசர் கேட்டால் நிச்சயம் நன்மை பிறக்கும். ஓவியம்முதல் நீச்சல் வரை அத்தனையும் அரசுப்பள்ளியிலும் கிடைக்குமெனில் பெற்றோர்கள் நிச்சயம் விரும்புவர் அரசுப்பள்ளிகளை.

    9 எந்தப் பள்ளியில் தன்னுடைய குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பெற்றோர்கள்தான். பென்சில் முதல்லேப்டாப் வரை அனைத்தும் இலவசமாய் தரப்பட்டும் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளியைத் தேர்ந்தெடுக்கவில்லை? ஆயிரமாயிரமாய் கொள்ளையடிப்பார்கள் எனத்தெரிந்தும் ஏன் தனியார் பள்ளியை நாடிச்செல்கிறார்கள்? காரணம், தனியார் மற்றும்அரசுப்பள்ளிகளுக்கிடையேயான தோற்றம்முதல் அடிப்படை வசதிகள் வரை அனைத்திலும் அமைந்திருக்கும் வித்தியாசங்கள் தான்.அரசுப் பள்ளி என்றாலே ஏழைகளுக்கானவை, அங்கு குழந்தை படிப்பது தனது கெளவரத்திற்கு இழுக்கு என்பதுதான் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் கருத்து. ஆசிரியர்களா இக்கருத்தை உருவாக்கியது? அரசுப்பள்ளிகளில் வகுப்பறைகளின் 4.7 சதவீதம் என்றும் தனியார் பள்ளிகளில்

    10.3சதவீதம் என்றும் சிஇஐ நடத்திய ஆய்வு கூறுகிறது. ஆக, வகுப்பறையே இல்லாத பள்ளிகளில் மாணவர்களை எங்கே அமரவைப்பது?10 ஆங்கிலம் பேசினால் அவர் அறிவாளியாய் மாறிவிடுவாரா என்ன? தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்து,பொறியியல் கல்லூரி வரை வந்த ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு நடத்திப் பாருங்கள்.அவர்களின் ஆங்கில அறிவும், கவலையும் நிச்சயம் புரியும். தமிழும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது என்பதுதான் அவர்களின் அரைகுறை நிலையாகும். முறையாய் ஒரு மொழிப்பாடமாய் ஆங்கிலம் சொல்லித் தரப்பட ஆங்கில ஆசிரியர்களை அனைத்துவகுப்புகளுக்கும் நியமிக்க ஆணை பிறப்பியுங்கள். அத்தோடு அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் படிப்பதைத் தடுத்து, தாய்மொழி வழிக்கல்விக்கும் உத்தரவிட்டுப் பாருங்கள். தனியார் பள்ளியின் மீதான மோகமும், கல்வி வியாபாரமும் நிச்சயம் குறையும்.

    11 ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர்என தனியார் பள்ளியில் இருக்கையில், அனைத்துப் பாடத்துக்கும் ஒரே ஆசிரியர் எனஅரசுப்பள்ளியில் இருக்கும் கொடுமையை யார் கேள்வி கேட்பது?

    ReplyDelete
  4. 12 வகுப்பறை நேரங்களில் செல்போன்பயன்படுத்தக்கூடாது என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அவரவர் பணி நேரங்களில் பயன்படுத்தக்கூடாதென்பது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான். ஆனால், அதைவிடவும் முக்கியமானதுமக்கள் பங்களிப்புதானே. பள்ளிநிர்வாகக்குழு என்றொரு குழு அனைத்துப்பள்ளியிலும் இருப்பதாக அரசு விதி கூறுகிறது. அந்தக் குழு என்ன செய்கிறதெனஅரசிடம் அறிக்கை கேளுங்கள் மாண்புமிகு.நீதியரசர் அவர்களே. பெற்றோர்களின் பங்களிப்பு பள்ளியின் நிர்வாகத்தில் இருந்தால் போதும், ஆசிரியர்களின் வருகை முதல்செல்போன் பயன்பாடு வரைஅத்தனையும்,ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் சரியாகும்.

    13 அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றப்படும் என அரசு கூறியுள்ளது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அரசுமற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எந்தவித வித்தியாசமும் கல்வியிலும்,கல்விச்சூழலிலும் இருக்காது என்ற நிலைதானே அரசுப்பள்ளியின் கல்வித்தரத்தை உறுதி செய்யும். சமமான, சீரான கல்வியை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தினாலே தனியார் பள்ளியின் மீதான மோகம் தவிர்க்கப்படுமல்லவா? ஆகவே, முழுமையான சமச்சீர் கல்வியை அமலாக்க உத்தரவிட வேண்டும் நீதிமன்றம்.

    14 பல ஆசிரியர்களிடம் இருக்கும் குறைகள் குறித்தும், பொறுப்பற்ற தன்மை குறித்தும் நிச்சயம் விமர்சிக்க வேண்டும்தான். ஆனால், ஆசிரியர்களுக்கான நியமனம் எப்படி நடக்கிறது என்பதிலிருந்து துவங்கவேண்டியதிருக்கிறது இந்த ஆய்வை. ஆசிரியர்தொழில் என்பது வேலைவாய்ப்புதான் எனினும்,அதை விடவும் உயர்ந்த நோக்கம் தேவைப்படுகிறதே. பிஎட் படிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கும்காலத்தில் உயர்ந்த நோக்கத்தை ஆசிரியர் பயிற்சியில் எப்படிஉருவாக்குவதென அரசுக்கு ஒரு கொள்கை இருக்கவேண்டுமல்லவா, அரசுக்கு இருக்கிறதா?

    15 ஒரு நாட்டில் உயர்ந்த ஊதியமே ஆசிரியர்களுக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், அதுதான் மிக உன்னதமான தொழிலாகும் ( NOBLE PROFESSION) ஆனால்,ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பளம் தரப்படுவதாய் நீதிமன்றமே வருத்தப்பட்டால் என்ன செய்ய? தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்ப்பட வேண்டும் என உத்தரவிடுவதே பொருத்தமாகும். கல்வி தான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கான மூலதனமாகும். அந்தப் பார்வை அரசுக்கு இல்லையெனில், தகுதியான ஆசிரியரை உருவாக்கவும் இயலாது, ஆசிரியரின் தகுதியை பாதுகாக்கவும் இயலாது. ஒருசமூகத்தின் வளர்ச்சியில் ஆசிரியருக்குஇருக்கும் பங்கு குறித்து அரசின் பார்வையென்ன என்று அரசிடமே கேட்கட்டும் நீதிமன்றம்.

    16 அனைத்துப் பள்ளிகளிலும் ஆறு மாதத்திற்குள் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிஏற்படுத்தவேண்டும் என 2012 அக்டோபர்18இல் நீதியரசர். கே.எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வாயம் ஒருஉத்தரவு இட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தாத குற்றம் ஆசிரியர்களையா சாரும்?அரசுப்பள்ளிகளின் கழிப்பறைகள் பயன்பாடற்றுப் போனதற்கு ஆசிரியர்களா காரணம்?100 சதவீத அரசுப்பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன என்று 2014,ஜூலை 30 அன்று விதி 110ன் கீழ் அன்றையமுதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வாசித்தார். ஒவ்வொரு கட்டமாக அனைத்துப்பள்ளிக்கும் கழிப்பறை கட்டுவோம் என இப்போது கல்வி அமைச்சர் கூறுகிறார். ஆனால், இருக்கிற கழிப்பறைகளே இயங்காமல் கிடைக்கிறதே ஏன்? எத்தனைப் பள்ளிகளில் துப்புரவு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? கழிப்பறைகளில் தண்ணீர் வசதிமுறையாக இருக்கிறதா? ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கென ஒதுக்கப்படும் தொகை என்னஎன நீதிமன்றம் ஒரே ஒரு கேள்வியை கேட்டால்பொதுமக்களுக்கு உண்மை புரிபடும்.

    ReplyDelete
  5. 17 20 மணவர்களுக்கு 1 குழாய் என்ற வீதத்தில் குடிநீர்க்குழாய்கள் என்றும்,20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை மற்றும் 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில், போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டமாய் கட்டப்பட வேண்டும் என்றும் 2012இல் வெளிடப்பட்ட அரசாணை நிலை எண் 270 யை அமல்படுத்த அரசு செய்தது என்ன என்றும், இன்று எத்தனைமாணவர்களுக்கு ஒரு கழிப்பறையும், குடிநீர்க்குழாயும் இருக்கிறது என்றும் ஒரு அறிக்கையை கேட்டுப் பெறட்டும் நீதிமன்றம்.

    18 உலகவங்கி சார்பாக 2012-13இல் செய்யப்பட்ட ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? 2253 பள்ளிகளில் ஓராசிரியர் தான் இருக்கிறாராம். இப்பள்ளிகளில் 83,641 மாணவர்கள் பயில்கிறார்களாம். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தானாம். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லையாம். காமராஜர் காலத்தில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் எனஇருந்த நிலை மாறி இன்று 40 மாணவருக்கு ஓராசிரியர் என்பதே அரசின் கொள்கை. 3000பள்ளிகள் வரை மூடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 2009-10 இல் 2.34 சதவீதமாக இருந்த ஒராசிரியர் பள்ளிகளின் சதவீதம், அடுத்த ஆண்டில் 2.63 சதமாகி, 2011-12ல் 3.38 சதமாக உயர்ந்துள்ளது. காரணம் என்ன தெரியுமா? மாணவர்கள் குறைந்துவிட்டனராம். ஆக,மாணவர்கள் இல்லா பள்ளியை மூடுவது என்பது அரசின் கொள்கையாக இருக்கையில் அரசுப்பள்ளிகள் எப்படி வளரும்?

    19 அரசுப்பள்ளிகளை விடவும் தனியார் பள்ளிகளில்தான் ஆசிரியர்கள் அதிகம்என்பது அதிர்ச்சியான தகவலாகும். 23522அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களோ வெறும் 60986 தான். ஆனால், 6278 தனியார் பள்ளிகளில் 51352 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதாவது அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளை விட சுமார் இரண்டு மடங்குஆசிரியர்கள் குறைவாக உள்ளனர். அதே போன்று, மேல்நிலை வகுப்புகளில் 2488 அரசுமேல்நிலைப்பள்ளிகளுக்கு 45540 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். ஆனால், 2128 தனியார் பள்ளிகளிலோ 83251 ஆசிரியர்கள் என அரசுப்பள்ளிகளை விட இரண்டு மடங்கு அதிகம். ஆக, இந்த விபரங்களைமட்டும் ஒப்பிட்டால் அரசுப்பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து, முப்பதாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்களே இல்லாத பள்ளிக்கு மாணவர்கள் எங்கிருந்து வருவார்கள்? ஆனால், அரசோ முதலில் மாணவர்கள் வரட்டும் அப்புறம் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனச் சொல்கிறது. இது அரசின் கொள்கை அல்லவா? யார் தலையிடுவது?

    20 மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மட்டும் தரமுள்ளதாக இருக்கிறதே, எப்படியென நீதிமன்றம் ஆய்வு செய்யட்டும். அதை மாநில அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தட்டும்.

    ReplyDelete
  6. THIS IS THE MESSAGE PRINTED IN THEEKATHIR NEWSPAPER.NAAMA KETKA NINAIPATHAI ARUMAIYAGA KETTA THEEKATHIR NEWSPAPERKU NANDRI

    ReplyDelete
  7. மேலே கூறிய அனைத்தும் அருமை, உண்மை.

    அரசு அரசுத் துறைகளை ஒழுங்காக பராமரித்து ,
    பாதுகாத்தாலே போதும் அனைத்தும் ஒழுங்காக நடக்கும்.

    இப்போது இயக்கி வரும் நிலை

    கல்வி =>அரசிடம் இருந்து தனியார்மையம்

    தனியார் பள்ளியின் கல்விக் கொள்கையை ஏன் அரசு பொதுக் கல்விக் கொள்கையாக்க (அனைத்தும் சமச்சீர் ) முயற்சிக் கூடாது????

    கல்விச் சேவையை பொதுமை படுத்த வேண்டும்.

    மருத்துவம்=>அரசிடம்இருந்துதனியார்மயம்

    அது எப்படி அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட பல மடங்கு செலவாகிறது தனியார் மருத்துவமனையில் .
    அதே படித்த டாக்டர்கள் தான்,
    அதே ஊசி,
    அதே மருந்து ஆனால் செலவு மட்டும் பல மடங்கு எப்படி??
    மருத்துவமனைபராமரிப்பு ஒன்றை சரி செய்தால் ,

    அரசும் தனியாரும் சமம்.

    மருத்துவ சேவையை பொதுமை படுத்த வேண்டும்.




    ReplyDelete
  8. very good theekathir news paper .thanks lot

    ReplyDelete
  9. For vandhae madharam song, bengali is the right answer.

    ReplyDelete
    Replies
    1. வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமக்கிருத பாடல் என கூறியுள்ளார் எனில் வங்க மொழியில் எழுதப்படுவதற்கு முன்னரே அது சமக்கிருத்த்தில இருந்த்து என்று தான் பொருள் கொள்ள வேண்டும்

      Delete
    2. Yes!!! Antha candidate pass thana!! All the best

      Delete
    3. Case seekirama mudinthuchu so athu varaiku best!!!

      Delete
    4. Itha pathutu 2017 yarum case podama iruntha sari than, cv notification vara nerathula vera, apuram avlo than.

      Delete
    5. கேள்வி பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது தான்..ஆகவே வங்க மொழியில் பாடல் இருந்தாலும் அது முதலில் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டது என்றும் மேலும் ஒரு மதிப்பெண் வழங்கினாலும் அவர் தேர்ச்சியடைய வாய்ப்பில்லை எனவும் அரசு தரப்பு வாதிட்டுள்ளது

      Delete
    6. Apdilam news-la podala. Bengali than government lawyer accept pantarunu than poturunthanga

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  10. Computer coaching centre in erode.contact number 8072087722

    ReplyDelete
  11. Telugu mediam tet passed candidates come to my whatsapp group.already 30 members are there . 9600640918

    ReplyDelete
  12. Paper -2 history = 8 members from thiruvallur, 7 members from krishnagiri dist, 2 persons from namakkal.( mbc male=02 ,oc male =01,oc female =01, sc female =01, mbc female =02,bc male =01.) .this is only telugu mediam paper -2 history major tn tet passed candidates. This is only my knowledge. 9600640918.

    ReplyDelete
  13. ஆசிரியரை திட்டாத மாணவன் இங்கு உண்டா? ஆசிரியரை மதிக்காத சமுதாயம் எப்படி உருப்படும்? நீதிபதிகளுக்கு இணையாக ஆசிரியர்கள் சில நாடுகளில் போற்றப்படுகின்றனர். ஆனால், இங்கோ நீதிபதியே ஆசிரியர்களை தூற்றுகின்றார். மகிழ்ச்சி !

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி