அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2017

அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதால், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்தாண்டைவிட தற்போது அரசு கலைக் கல்லூரி களில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்கப்பட்டு புதிதாக 268 பாடப்பிரிவுகள் கலைக் கல்லூரிகளில் கொண்டு வரப்படு கிறது. வரும் கல்வியாண்டில் 7 புதிய கல்லூரிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்கல்வியிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே, 65 கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத் தில் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. இதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வருந்த வேண்டாம். எண்ணிக்கையிலும் எண்ணங்களிலும் உயர்ந்தவர்கள் நாம்தான் . அடுத்த பட்டியலில் வேலைக்கு போவதும் நாம்தான்.
    வெயிட்டேஜால் பாதிக்கபட்டு தற்போது வெயிட்டேஜ் மாறினால் பாதிக்கபடுபவர்களே!
    நீங்கள் போராடவேண்டாம்
    குரல் கொடுக்க வேண்டாம்
    அமைச்சரை சந்திக்க வேண்டாம்
    ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம்.

    எல்லாவற்றையும் நாங்கள் செய்கிறோம்.
    நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
    அழையுங்கள் 8012776142.
    9500959482
    2012 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு.......

    2012 ல் ஒரு வெயிட்டேஜ்
    2013 ல் ஒரு வெயிட்டேஜ்
    2017 ல் ஒரு வெயிட்டேஜாாாா?

    தேர்வு ஒன்று!
    நியமன முறை மூன்றா
    வெயிட்டேஜ் உப்புத்தான் - அதை
    இப்ப மாத்துவது தப்புத்தான்.

    ஏற்கனவே வெயிட்டேஜால் போனோம் பின்னாடி.
    இப்பதான் வந்துருக்கோம் கொஞ்சம் முன்னாடி.
    மாத்துனா ஆயிடுவோம் உடைஞ்சுபோன கண்ணாடி.

    அரசாணை 71 தொடர வேண்டும்
    உடனே அழையுங்கள்
    உங்களுக்காக நாங்கள்.👍8012776142
    👍9500959482

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி