சான்றிதழில் குளறுபடி: மாநிலக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பணியிடை நீக்கம்: கல்லூரி கல்வி இயக்குநரகம் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2017

சான்றிதழில் குளறுபடி: மாநிலக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பணியிடை நீக்கம்: கல்லூரி கல்வி இயக்குநரகம் அதிரடி

கல்விச் சான்றிதழில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரி உடற்கல்வி இயக்குநரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி வருபவர் இளங்கோவன். இக்கல்லூரியில் 1990 - ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவர், 1998 இல் உடற்கல்வி இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்த 27 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் சமர்ப்பித்த கல்வித் தகுதிச் சான்றிதழில் குளறுபடி இருப்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் தற்போது கண்டுபிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த புதன்கிழமை தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: இளங்கோவனின் கல்வித் தகுதி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் அலுவலகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரியில் படித்ததாக கல்விச் சான்றிதழ் ஒன்றை அவர் சமர்ப்பித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அப்படியொரு படிப்பு அந்த ஆண்டில் ஒய்எம்சிஏ- வில் நடத்தப்படவில்லை என்பதும், அவர் சமர்ப்பித்திருப்பது போலிச் சான்றிதழ் என்பதும் தெரிய வந்தது.
அதனடிப்படையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இளங்கோவன் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

இதுகுறித்து மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:
போலி சான்றிதழ் சமர்ப்பித்து அரசுப் பணியில் சேர்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுடைய கல்வித் தகுதியை ரத்து செய்வதுடன், அவர்களை உடனடியாக பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் வேண்டும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 6) உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதனடிப்படையில், இளங்கோவன் சமர்ப்பித்திருப்பது போலியான சான்றிதழ் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றால், அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவரைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி