மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2017

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத் துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவு களின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தமாணவரான தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.அதில், ‘‘சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் உள்ள 2,500 இடங்களில் 319 இடங்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டு தற்போது மாநில வழிக்கல்வி, மத்திய வழிக்கல்வி என மாணவர்களை பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. மருத்துவ கவுன்சில் விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி யினர். ஓபிசி பிரிவினர் என சாதீய அடிப்படையில் மட்டுமே இடஒதுக் கீடு வழங்க தமிழக அரசுக்கு அதி காரம் உள்ளதே தவிர, பாடத் திட்டத்தின் அடிப்படையில் 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு வழங்குவது என்பது சட்ட விரோதமானது. இந்த அரசா ணையை செயல்படுத்தும் அதிகா ரமும் தமிழக அரசுக்கு கிடையாது. எனவே கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசா ணையை ரத்து செய்ய வேண்டும்” என அதில் கோரியிருந்தனர்.இந்நிலையில் இதற்கு தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் கூறியி ருப்பதாவது: மாநில பாடத்திட் டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு.இவ்வாறு வழங்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி