அரசுப்பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் IAS அதிகாரி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2017

அரசுப்பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் IAS அதிகாரி


சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.“அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் சேர்க்கக்கூடாது?”, என்று சமீபத்தில்ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது ஒரே மகளைமாநகராட்சி பள்ளியில் சேர்த்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.அவரது பெயர் லலிதா, பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை கமிஷனர் பதவி வகிப்பவர். கல்வித்துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரது ஒரே மகள் தருணிகா. பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா தனது மகள் தருணிகாவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் நேற்று சேர்த்தார்.பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது தான் வழக்கமாக இருந்துவருகிறது. பெரிய டாக்டராகவோ, என்ஜினீயராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ ஆக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் நகரில் உள்ள பெரிய பள்ளிகள் சேர்ப்பார்கள்.ஆனால் அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் எப்படி தன் மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? என்பது குறித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, ‘ கூறியதாவது:-‘

ஏதாவது மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், நீ அதை உண்டாக்கி காட்டு’, என்ற பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை சமுதாயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். அதை நான் பின்பற்றியிருப்பதாலேயே எனது மகளை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து இருக்கிறேன். இதுதான் எனது ஆசையாகவும் இருந்தது.மாநகராட்சி பள்ளிகள் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இங்கு உள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தரம் வாய்ந்ததாகவே மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இன்றைய தினம் என் பிள்ளையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவள் நிச்சயம் இங்கு கல்வி கற்று சிறந்த நிலையை அடைவாள் என்பதில் உயரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பின்பற்றி மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை கமிஷனராக கடந்த 2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறேன். அப்போதே ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை நிச்சயம் மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும்’, என்று நினைத்தேன்.

இப்போது மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கமிஷனராக இருக்கும்போதே நினைத்ததை செயல்படுத்தி உள்ளேன்.எனது கணவர் சுமந்த் மற்றும் எனது பெற்றோர் ராஜேந்திரன்-தமிழரசி ஆகியோர் நான் எடுத்த முடிவு சரிதான் என்று அதனை வரவேற்று, எல்லா விதத்திலும் ஊக்கம் அளித்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர்.இவ்வாறு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா பெருமிதத்துடன் கூறினார்.தனது ஒரே மகளை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

71 comments:

  1. மகிழ்ச்சி வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தாள் 1,CV க்கு எப்ப கூப்பிடுவாங்க

    ReplyDelete
  6. தாள் 1,CV க்கு எப்ப கூப்பிடுவாங்க

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Replies
    1. Sirapu mam ,engaluku magilchi.

      Delete
    2. மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

      தங்களைப் போல்
      முன் உதாரணங்களாக வாழ்பவர்கள் அரிதாகிவிட்டதால், தான்
      மக்கள்
      ஆட்டு மந்தைகளைப் போல் உழைக்கும் பணத்தை,
      எந்த எதிர் கேள்வி கூட கேட்க்காமல் தனியாரிடம் கொட்டிக் கொடுத்து,
      கைகட்டி வாய்பொத்தி நின்று, அவர்கள் போதிக்கும் கல்வி மட்டும் தான்
      உலகில் வாழ்வதற்கு உகந்தது என்ற மாயையில்
      சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

      உங்களைப் போன்று பல பல பல முன் உதாரணங்கள் வெளிச்சமா மாறி
      கல்வி ஒளியை
      அனைவருக்கும் சமமாக கொண்டு வருவதற்கு முயற்சித்தால் போதும்.
      எல்லோருக்கும் எல்லாம் சரிநிகர்சமமாகவும் உண்மையாகவும் போய்ச் சேரும்.

      Delete
  9. SUPEEB MAM.பாராட்டுகள்

    ReplyDelete
  10. Salyut to you and to your family Madam

    ReplyDelete
  11. SUPERB MAM.பாராட்டுகள்

    ReplyDelete
  12. great madam.role model to others👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  13. ARUMAIYANA YOSANAI.MANAMARNTHA vaazhtthukkal mam.

    ReplyDelete
    Replies
    1. Ma happy my 1st sem marksheet missing consolidate iruku ipo vanga try panitu irukn kidaikalana ethavathu prblm varuma

      Delete
    2. Ma happy my 1st sem marksheet missing consolidate iruku ipo vanga try panitu irukn kidaikalana ethavathu prblm varuma

      Delete
    3. Try to get it fast. It's a process of elimination.

      Delete
    4. Try to get it fast. It's a process of elimination.

      Delete
    5. Problem varathu I too didn't give during 2013 cv.now also I had only consolidated mark sheet for this cv

      Delete
    6. Problem varathu I too didn't give during 2013 cv.now also I had only consolidated mark sheet for this cv

      Delete
  14. ஆசிரியர்களாகிய நமது பாராட்டுக்கள் அவருக்கு மகிழ்ச்சியை தராது.

    4 பத்தியில் 9,10,11 ஆம் வரிகளை நன்றாக படியுங்கள்.

    அவர் எதிர்பார்த்தபடி,

    நான் என் குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்ப்பேன் என உறுதிமொழி எடுத்து இங்கு பதிவிட்டால் அவருக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சியை சேர்க்கும்.
    செய்வீர்களா???????

    ReplyDelete
  15. Let her changes ignite others.. Proud of you mam..

    ReplyDelete
    Replies
    1. mam form fill panrathu and sign panrathu Tamil la thana pannanuna?? naa ellame English la fill panni attest vangiruken

      Delete
    2. mam form fill panrathu and sign panrathu Tamil la thana pannanuna?? naa ellame English la fill panni attest vangiruken

      Delete
    3. Last time bio data tamil la than panom mam.. Id than english. Since you have got attested call trb and ask, k solita no issues ilana better take another print and repeat the procedures.

      Delete
    4. Hi anonymous, last time I filled everything in English only pa.. there is no instruction to fill in Tamil na..

      Delete
    5. San hope you remember 2013 cv and 2014 cv (after relaxation) so we relaxation candidates were given suggestions from those previously cv finished candidates and we also did that. That's why telling babila mam to call and have a check with trb, then she can proceed with next steps.

      Delete
    6. ok mam.. i will do.. one more doubt sign tamil la pannanuma??.or English la panlama in bio and id form..ithu vara tamil la sign pannathu illa..athan kekuren

      Delete
    7. ok mam.. i will do.. one more doubt sign tamil la pannanuma??.or English la panlama in bio and id form..ithu vara tamil la sign pannathu illa..athan kekuren

      Delete
    8. Mam, apdilam ethum ila mam, you can sign as how you have signed so far.. No issues..

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. Mam id form la exam time epadi sign podingalo atha tha podanum!!athan athu oru verification ah vaithurukanga

      Delete
    11. thank u anonymous mam and diana mam

      Delete
  16. Tet 2017 chemistry waitage 65.7 mbc male job kedaika vaippu iruka pls solunga

    ReplyDelete
  17. புதிய அரசாணைப்படி PG & BT பணியிடங்ளுக்கு இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்கப்ப்படும்.இது 1114 பணியிட தேர்வில் தரப்பட்டதா? 2012,2013,2017TET PASS TEACHERS க்கு பொருந்துமா? 8838958017 ; 9787178178

    ReplyDelete
    Replies
    1. 1114 posting g.o தேதிக்கு முன்பு அறிவிக்கப்பட்டது........

      Delete
    2. What's the GO date, how can you implement post dated GO to all pre dated exams?? For pg alone objection (sgt 10%) was included in the form, it was not so in tet. How can you say so?? Dont create unwanted rumours

      Delete
    3. http://trb.tn.nic.in/PG2017/30052017/GOMS110-26052017A.pdf

      Delete
    4. GO padichu parunga, athula page number 3-la "The amendment can come in to force from 26.05.2017" apdinu clear aga iruku. Antha time PG applying time irunthuchu, so elarayum again form poitu yes or no kuduka sonathu ungalukum therinjurukalam, but TET porutha vara exam april30 mudinju pochu, so GO athuku applicable agathu sir.. Post date GO, So agathu.

      Delete
  18. ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான்..!

    அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை.

    இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

    ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

    வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பி கொண்டிருந்தான்.

    ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

    அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?

    இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

    இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

    இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

    அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

    இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

    அதே வீடு தான் " ,

    அதே நெருப்பு தான் " ,

    ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

    சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
    நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
    முழு தொகை இன்னும் வரவில்லை.

    வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .

    இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.

    தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

    சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.

    இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

    ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

    இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.

    கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.

    மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

    இங்கு எதுவுமே மாறவில்லை ,

    அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ,

    இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

    நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

    உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

    ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

    நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை..

    #அன்பாய்_இருப்போம்..
    #பண்பாய்_இருப்போம்..

    ReplyDelete
    Replies
    1. கதைஆசிரியரே சிறப்பு மிகச்சிறப்பு

      Delete
    2. கதைஆசிரியரே சிறப்பு மிகச்சிறப்பு

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Thank u anony mam & hakkim bro..

      Delete
  19. Congratulations Mam..U became role model to all..We wish all success in ur daughter's life..👍

    ReplyDelete
  20. மகிழ்ச்சி வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம் and I wou join my son in govt school mam......

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோதரரே உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

      Delete
    2. மகிழ்ச்சி சகோதரரே உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

      Delete
  21. My baby also study in corporation school. My wife corporation school teacher at Kottur.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    2. வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    3. Great sir.vazthukal b
      Mr.balamurugan sir

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி