அறம் : சிறப்பு கட்டுரை - கனவு பள்ளி பிரதீப் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2017

அறம் : சிறப்பு கட்டுரை - கனவு பள்ளி பிரதீப்


கண்ணிற்கு  தெரிந்த மனிதன் மீது அன்பு செலுத்த தெரியாத ஒருவனால் கண்ணிற்கே தெரியாத கடவுள் மீது அன்பு செலுத்தி என்ன பயன் - தெரசா

உதவி செய்வதில் மகிழ்ச்சி உள்ளதா ?


மகிழ்ச்சியின் அடுத்த நிலை அறிவோமா ?

முகம் தெரியாத ஒருவனுக்கு உதவுவது கடமையா ?

உதவி பெறுபவன் மன ஓட்டம் புரியுமா ?

அறம் செய்தல் அத்தனை அவசியமா ?

அறம் தருதலுக்கு அளவுகோல் உண்டா?

கேள்விகள் பல பரிணாம பட்டாலும் விடை ஒன்றே

அன்னை தெரசாவை படியுங்கள்

மடங்கிய விரல்கள் ரணமான தோல் கண்டவுடன் நம்மில் பிறப்பது - அறுவறுப்பு அல்லவா

ஆனால் அன்னை அவள் அகத்தில் சுரந்தது மனிதம்

இளமை அழகை வெள்ளாடை போர்த்தி மிருகம் பலவற்றிடம் இருந்து தன்னை காத்து - எதிர் நின்ற மனிதனை தேடி தேடி அறம் செய்தவள் மாதா தெரசா

சொடுக்கிய விரல்களை வருடி ரணமான உடலை அலங்கரித்து அனுதினமும் மனிதம் சுரந்தவள் அன்னை தெரசா

பயணம் வழி தெரியாமல் தொடங்கினாலும் விட்டு சென்ற சுவடுகள் ஏராளம். இறக்கும் போது அவர் பாதுகாத்த சேவை நடுவங்கள் 4600

தனி ஒரு மனிதன் வாடிய போது தன்னை வருந்தி உடன் வாடியவள் தாய் அன்னை.

உணர்வுபூர்வமான தாயின் சேவையை கதையாக அல்லாமல் உணர்வாக மழலைக்கு ஊட்டுவோம்

பொத்தி பொத்தி வளர்க்கும் குயில்கள் ரண பயணம் அறியாது. எதிர் வரும் தலைமுறைகளை கணினி மனம் போல அழுத்தி விடாமல் மனித வாசம் உடன் வீச பயிற்சி அளிப்போம்

எச்சில் நீரை பிறருக்காக ஏந்திய தாயின் நினைவுகள் - மனிதத்தின் சுவடுகள்

உதவி செய்வதை விட மிக பெரிய மகிழ்வு இல்லை

மகிழ்வின் மேல்நிலை ஆத்ம திருப்தி - அறத்தால் பிறப்பது

முகம் தெரியாதவனும் மனிதன் தானே . அது சேவை - மருத்துவனும் / ஆசிரியனும் அந்நிலை உணர்தல் சமூக கட்டமைப்பை முறையாக்கும்

கடும் பசியில் உள்ள ஒருவனுக்கு ஒரு வேளை உணவு அளிக்கும் போது புரிகிறது - அறத்தின் வலிமை

அறம் இல்லையேல் பொருள் / இன்பம் வீண்

அளவுகோல் அற்ற இரண்டவை : அன்பும் அறமும்

- அறம் செய விரும்பு : கனவு பள்ளி பிரதீப்

1 comment:

  1. 'அறம் செய்ய விரும்பு'வோம்.👍

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி