அமைச்சரவையில் மாற்றம்?: அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2017

அமைச்சரவையில் மாற்றம்?: அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

அதிமுக அணிகள் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ்.


ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகி தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டுகிறார். இதையடுத்து அதிமுக 3 அணிகயாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைப்புக்கான பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தநிலையில், அதிமுக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இன்று இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை 9.30 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு சென்னை வருகிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்ற தகவல் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்க கூடும் எனவும், துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் இன்றே பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி