தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்த உத்தரவிட கோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2017

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்த உத்தரவிட கோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக  மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு வழங்கிய உள்ஒதுக்கீடு 85 சதவீதம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், மருத்துவ கலந்தாய்வு இன்னும் துவக்கப்படவில்லை. இதனால் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். எனவே தமது வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதனையடுத்து நளினி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அவரது மனு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்படும் என  அறிவித்துள்ளது. முன்னதாக மருத்துவ படிப்பில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று இந்த கல்வியாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதனையடுத்து பெரும் குழப்பங்களுக்கிடையே இந்த கல்வியாண்டில் தமிழக மாணவர்களும் நீட் தேர்வை எழுதினர். தேர்வில் பல வினாக்கள் CBSE பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் புகார் கூறினர். இதனால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்தனர்.  இதனையடுத்து சில நாட்களுக்கு முன் தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிடப்பட்டது. 15 சதவீதம் மற்ற மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எஸ்.சி மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, இதுபோன்ற உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசின் அரசாணை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எதிரானது என தெரிவித்து, அந்த அரசாணையை அதிரடியாக ரத்து செய்தார்.  நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மருத்துவ படிப்பில் 85% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.மாநில மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்டஆனால் இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது. 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே சமநிலையை உருவாக்க தான். மற்ற மாநிங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போது தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என வினவியது. தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், CBSE மாணவர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்கமுடியாது என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல் சிபிஎஸ்சி மாணவர்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ராமமோகன் ராவ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.  வழக்கில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும் பலவேறுபாடுகள் உள்ளன. இரண்டையும் சரிசமமாக பார்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல கிராமப் பகுதிகளில் CBSE பள்ளிகள் கிடையாது. எனவே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதில் கடும் சிரமம் அடைந்தனர். இதுபோன்ற வித்தியாசங்களை சமமாக கொண்டுவர வேண்டும் என்ற காரணத்தினால்தான் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை கொண்டுவந்ததாக வாதிடப்பட்டது.

CBSE மாணவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக உள்ளதாக சாடினார். நீட் தேர்வு எழுதவதற்கு முன்பு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடாமல், தேர்வு எழுதிய பின்னர் இதுபோன்ற அரசாணை பிறப்பிப்பதால் CBSE மாணவர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என வாதி்ட்டார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று அறிவித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கலந்தாய்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் திருப்பமாக ஓராண்டிற்கு மட்டும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்தது. இதனையடுத்து ஓராண்டிற்கு விலக்கு கோரும் அவசர சட்ட முன்வரைவு மசோதாவை மத்திய அரசிடம் தமிழகம் தாக்கல் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த CBSE மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் CBSE மாணவர்களுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. pls anyone tell me there r 359seat in pg eng bt they called 393

    ReplyDelete
    Replies
    1. Work experience and employment seniority Ku mark kudupanga..... Athula first 359 Ku job according to community brother

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி