Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கோட்டையை உலுக்கும் உறுதிச்சந்திரன்!

ரன்சிவாதிகளின் கண் பட்டுவிட்டதால் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் எந்த நிமிடமும் மாற்றப்படலாம். ‘எந்த நல்லதும் நெடுநாளைக்கு நடக்காது, நல்ல விஷயங்களை நடக்க விடமாட்டார்கள்’ என்பதற்கு உதாரணமாக உதயசந்திரனுக்கு நடந்துவரும் அனுபவங்களைச் சொல்லலாம்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன், உதயசந்திரனை அத்துறையின் செயலாளர் ஆக்கினார். இருவரும் இணைந்து கோமா நிலையில் கிடந்த பள்ளிக் கல்வித் துறைக்கு உயிர்கொடுத்து, தேவையான மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அ.தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கூட, பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் பாராட்டுகின்றனர்.

‘10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ரேங்கிங் என்று முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடல், 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, ஆசிரியர் - மாணவர் வருகைப் பதிவேட்டை பயோமெட்ரிக் முறைக்கு மாற்றுதல், சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி, நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தகுதித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி, 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பள்ளிப் பாடங்களை மாற்றுதல், கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை ஆன்லைன் மூலம் நிரப்புதல், ஆசிரியர்களுக்குப் பொது இடமாறுதல் கவுன்சலிங்... என்று பள்ளிக்கல்வித் துறையில் கொண்டு வந்துள்ள அதிரடி மாறுதல்கள் எல்லாம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் உதயசந்திரனை ‘இன்று மாற்றப் போகிறார்கள்’, ‘நாளை மாற்றப் போகிறார்கள்’ என்று கோட்டை வட்டாரம் கிசுகிசுக்க ஆரம்பித்தது.அரசியல்வாதிகளின் ஊழலுக்கு இவர் உடன்படவில்லை’ என்று இதற்குக் காரணமும் சொல்லப்படுகிறது. ‘‘ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சலிங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார் உதயசந்திரன். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், பி.ஏ-க்கள், புரோக்கர்கள் தலையீடு இல்லை. இந்தக் கவுன்சலிங் முடிந்த பிறகு, 1,300 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் போட வேண்டும் என்று மேல் மட்டத்தில் இருப்பவர்கள் உதயசந்திரனுக்குச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு இவர் மறுத்துவிட்டார். இந்த இடங்களுக்கு தலா 3 முதல் 5 லட்ச ரூபாய் வரை வாங்கி இருக்கிறார்கள். இந்த மோதல் சில வாரங்களாகவே நடந்து வந்தது.

மொத்தமாக இவர் ‘முடியாது’ என்றதும் 300 பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்து, ‘இந்த ஆசிரியர்களுக்காவது இடமாறுதல் போட்டுக் கொடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதையும் மறுத்துவிட்டார். அதன்பிறகு 69 பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்து இடமாறுதல் போட்டுத் தரச்சொல்லி இருக்கிறார்கள்.

அதையும் செய்ய முடியாது என்றவர், ‘ஆசிரியர்கள் இடமாறுதலை வெளிப்படையாகச் செய்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஏற்கெனவே, இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் செய்தது போல கவுன்சலிங் மூலம் மீண்டும் செய்துவிடலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இது மேலிடத்துக்குப் பிடிக்கவில்லை.

‘எப்படியாவது இவரைத் தூக்குகிறோம்’ என்று சில அமைச்சர்களின் பி.ஏ-க்கள் புஜம் தட்டினார்கள். மேலிடத்தில் இருந்து பேசிய ஒருவர், ‘சிலருக்கு மட்டும் டிரான்ஸ்ஃபர் போடுவதால் எதுவும் ஆகிவிடாது’ என்று சொல்ல, ‘கவுன்சலிங் இல்லாமல் ஒருவருக்கு பணிமாறுதல் கொடுத்தாலும் தவறுதான்’ என்று உதயசந்திரன் சொன்னாராம்.

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் இடமாறுதல், பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல், பள்ளிகளுக்குத் தடையில்லாச் சான்றிதழ் கொடுத்தல் என்று பல வேலைகளுக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். உதயசந்திரன் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் முறைக்குக் கொண்டுவந்தார். அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக்கினார். இதையும் இந்த வட்டாரம் விரும்பவில்லை.

பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளார்கள். இவர் ஏற்கெனவே நிதித்துறையில் இருந்ததால் சாமர்த்தியமாக நிதி பெற்றுவிட்டார். உதயசந்திரன் இருந்தால் இதில் லாபம் பார்க்க முடியாது என்பதால் அவரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த நினைக்கிறார்கள்” என்று சொன்னார்கள் பள்ளிக்கல்வி துறை வட்டாரத்தினர்.

பள்ளிக்கல்வித் துறை விழா ஒன்றில் கலந்துகொண்ட உதயசந்திரன், மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய அறிவுசார் பணிகள் குறித்து ஒன்றரை மணி நேரம் பேசினார். அந்தப் பேச்சில், ‘‘பள்ளிக்கூடங்களில் திறமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் பள்ளிக்கூடத்தில் இருந்தேதான் பிரச்னைகள் வரும்.

 அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை எப்போதும் போல கவனமுடன் செய்ய வேண்டும். உங்களுக்கு அந்தப் பிரச்னை மனவேதனையைத் தந்துகொண்டு இருக்கிறது என்று நினைத்தால் அதை நீங்கள் என்னிடம் சொல்லலாம். உங்களது செயல்பாடுகளைக் கோட்டையில் இருந்து இரண்டு கண்கள் கவனித்துக்கொண்டு இருக்கின்றன. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது’’ என்று பேசினார். இதைக் குறிப்பெடுத்த உளவுத்துறை, தனது குறுக்குப் புத்தியைக் காட்டிவிட்டதாம்.

‘இரண்டு கண்கள் என்று அமைச்சரைக் குறிப்பிடாமல் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார்’ என்று ஒன்றரை மணி நேரப் பேச்சில் ஒரு நிமிடத்தை மட்டும் அமைச்சருக்குப் போட்டுக் காட்டியதாகவும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் உதயச்சந்திரன் பதவிக்கு வேட்டு வைக்கக் காத்திருக்கின்றன.

30 comments

 1. திறமையானவர்களை,அறத்தின் வழி செயல்படும் நேர்மையாளர்களை ஆதரிப்பதும்,அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் நமது கடமை.

  திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் உரையாடிய உரையாடலை கீழ்க்கண்ட link இல் காணலாம்.

  https://www.youtube.com/watch?v=0DsiRxJGYmA&spfreload=10

  ReplyDelete
  Replies
  1. Is it the same video which was played during RMSA training??

   Delete
  2. Neenda idaivelikku piragu maniyarasan sir peyar....thodarungal......

   Delete
  3. That video was so much motivating and informative as well.. Through his speech in that video only I was inspired by him a lot.. Wonderful person he was..

   Delete
  4. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்று இன்று வரை வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தகவல் தெரிந்தவர்கள் பகிரவும்

   Delete
 2. ஒருவர் B.Sc (maths) ., B.Ed (maths)முடித்துள்ளார் பின் B.Sc(BOTONY) முடித்துள்ளார் அவர் BOTONY பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
  ஒருவர் M.COM + B.Ed (COM)., முடித்துள்ளார் பின் B.A(HISTORY) முடித்துள்ளார் ...அவர் B.A(HISTORY)பிரிவில் தேர்வு எழுதி CV முடித்துள்ளார் ...............
  இவர்கள் எவ்வாறு தகுதி பெற்றனர் ????????
  இவர்களுக்கு பணி வழங்கப்படுமா ???????

  ReplyDelete
  Replies
  1. Intha muraikku GOVERNMENT ORDER irukkuthu payappada theyvai illai

   Delete
  2. பாடவாரியாக B. ED படிப்பதே அந்தந்த பாடத்தில் சிறப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்கும் பொழுது பாடப் பிரிவுகளை மாற்றி இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று பணியில் சேருவது முறையா?. இதனால் குறிப்பிட்ட பாடத்தில் B. ED படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது?

   Delete
 3. பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சி படிப்பும் ஒரே பாடமாக இருக்க வேண்டும்.ஆனால் இங்கு மாறுபட்டுள்ளது.

  இவருக்கு பணி நியமிக்கப் பட்டால் பிறர் நீதிமன்றத்தை நாடுவர்.

  பணி நியமனம் செய்யவில்லை என்றால் இவரே நீதிமன்றம் செல்வார்.எப்படியாயினும் இதற்கு நீதிமன்றதின் மூலமே தீர்வு காண இயலும் என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாடவாரியாக B. ED படிப்பதே அந்தந்த பாடத்தில் சிறப்பான கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்கும் பொழுது பாடப் பிரிவுகளை மாற்றி இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று பணியில் சேருவது முறையா?. இதனால் குறிப்பிட்ட பாடத்தில் B. ED படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது?

   Delete
  2. B.ed is common degree. Government passed g.o so we can not go to court. That is also no use.

   Delete
 4. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு pg
  ஆசிரியர்கள் பணம் கொடுத்து பணியில் join பண்ணிவிட்டார்கள் , அவ்வாறு உதயாசந்திரன் கையெழுத்து போடவில்லை என்றால் யாரு இவர்களுக்கு பணி மாறுதல் கொடுத்தது , உதாரணம் கரூர் porani school

  ReplyDelete
  Replies
  1. திருநெல்வேலி மாவட்டதிலும் இருவர் பணம் கொடுத்துச் சேரந்துள்ளனர்

   Delete
  2. தரம் உயர்த்தப் பட்ட ஆசிரியர்களே இல்லாத காரணத்தினால்,சில ஆசிரியர்களை "நிர்வாக மாறுதல்" அடிப்படையில் நியமித்து இருப்பார்கள்.

   மற்றபடி வேறு எங்கும் முறைகேடான பணி மாறுதல் நடைபெறவில்லை. அவ்வாறே இருக்க வேண்டும் என்றும் நம்புவோமாக!

   Delete
  3. It may be true for pg, but for tet its different scenario..

   Delete
  4. Sathiyama en kannu munnala oru asiriyar 4 lakhs koduthu 2 days back transfer vankirukanka it is true promise entha amaichar entha arasankam Nallavaea erukathu god will give punishment

   Delete
 5. தயவு செய்து உதயசந்திரன் ஐயாவை் மாற்றாதீர்கள்... உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் அமைச்சர் அவர்களே.....

  ReplyDelete
 6. Replies
  1. hi! how are you? what about your job? how did you write PG TRB?

   i hope, you will be selected in..

   and finally one thing, as you mentioned here,i have written many articles.it will be published soon.keep reading!!!

   Delete
  2. Hi, am good.. Hope everything fine with u.. Nothing good about pgtrb.. I know u might have written so many articles but none was published since u got placement, that's y asked.. Go-ahead with your articles..

   Delete
  3. தமிழ் நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல் இருந்தால் கூறவும்

   Delete
  4. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்று இன்று வரை வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ற தகவல் தெரிந்தவர்கள் பகிரவும்

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. PGTRB BOTANY CUT - OFF DETAILS
  https:pgtrbbotany.blogspot.in

  ReplyDelete
 9. I am passed the CTET Test.that is equal of TET may be also appointment to state government norms

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives