Flash News:அதிமுக இரு அணிகளும் இணைந்தன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2017

Flash News:அதிமுக இரு அணிகளும் இணைந்தன


பரபரப்பான அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்துள்ளன. அணிகள் இணையுமா என்ற பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சுமார் 6 மாதங்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

கட்சி அலுவலகத்திற்கு வந்த OPS-ஐ முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அனைவரது முன்னிலையிலும் கை குலுக்கி இருவரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றார். நாம் அனைவரும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள். அதிமுக அணிகள் இணைப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றார். தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த அணிகள் இணைப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். தற்போது எனது மனதில் இருந்த பாரம் இறங்கி விட்டது என்றார். மறைந்த ஜெயலலிதாவின் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துவோம் என்றார். அணிகள் இணைப்பை உறுதி செ்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார்.

பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6 மாதத்தில் பல்வேறு எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தோம். தற்போது அணிகள் இணைப்பின் மூலம் அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளதாக எடப்பாடி குறிப்பிட்டார். ஆட்சி கவிழும் என நினைத்தவர்களுக்கு இந்த அணி இணைப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என்றார். 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு ஒன்றும் கட்சியில் அமைக்கப்படும் என்றார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருப்பார் என தெரிவித்தார்.

 கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக தாம் செயல்படுவேன் என்றார். மேலும் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் இருப்பார்கள் என்றார்.மேலும் அணிகள் இணைந்துவிட்டதால் கட்சியின் சின்னமான இரட்டை இலை விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி