Flash News:முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுரிடம் தனித்தனியே கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2017

Flash News:முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுரிடம் தனித்தனியே கடிதம்


பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர். இன்று காலை ஆளுநர் மாளிகையில் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த தினகரன் ஆதரவு MLA-க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்துள்ளனர். தினகரன் ஆதரவு MLA-க்கள் ஆளுநரிடம் அளித்துள்ள கடிதத்தில், நல்ல முதல்வராக செயல்படுவார் என்ற எண்ணத்தில் பழனிசாமிக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் அவரோ அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஊக்குவித்து வருகிறார் என்றும் சாடியுள்ளனர். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற மறைந்த ஜெயலலிதாவின் கனவை முதல்வர் சிதைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். எங்களது நம்பிக்கையை தக்க வைக்கும் வகையில் முதல்வர் செயல்படவில்லை. முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்த போதும், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராக தொடர்கிறோம். எடப்பாடி பழனிசாமி அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.  தங்களின் நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் முதலமைச்சர் இழந்துவிட்டதால், ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்எல்ஏக்களும் தனித்தனியாக கடிதம் அளித்துள்ளனர்.

முதல்வராக இருப்பவர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். முதல்வரின் ஊழலால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. முதல்வர் பழனிசாமி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். மேலும் ஜெயலலிதாவின் கொள்கை படி எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தவில்லை. தமிழக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தவே ஆதரவு வாபஸ் பெறப்பட்டது. எனவே அவருக்கான ஆதரவை நாங்கள் விலக்கி கொள்கிறோம். இவ்விவகாரத்தில் சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநரிடம் அவர்கள் அளித்துள்ள கடிதத்தி்ல் கூறியுள்ளனர். 

20 comments:

  1. Evla c vangunangalo 19 mla haa

    ReplyDelete
  2. ஆட்சிக்கு ஆபத்து இல்லை , முதல்வர் பதவிக்கு மட்டுமே..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Ivanga tholla thanga mudiala makkala vazhavum vida matanga sahavum vida matanga

    ReplyDelete
  7. Replies
    1. Etho 24 counseling nu soningaley athu neet exam ah??? Athumey 25 nu la solirukanga !!! Epadi ipadi 3:23!!!

      Delete
  8. Replies
    1. Ha ha semma. Iniku edho flash news nu oru kiruku solluchu. Adhu varudha nu paapom. Illana andha kiruku vaaya mooditu poradhu dhan nalladhu 😁😁😁😁

      Delete
    2. Maavaaatrathu pathi edhavadhu flash news ah irukum.. 😁😁😁😁

      Delete
  9. Replies
    1. Cv pass pass panniyavarkalukku oru piratchchanaium varathu payappadatheynka sir

      Delete
  10. Admission B.Ed,M.Ed,BE,ME,MBA,MCA,SC and ST full free and Aied school join content me 9942799662

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. IAM.M.com.M.phil.commerce.SET.NET..M.ed.education.SET.BUT TRB2017PG.SELACATED IN COMMERCE.SET.NET USE AKUMA.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி