அரசு மருத்துவமனைகளில் 1,000 டாக்டர்கள் நியமனம்: கலந்தாய்வு தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2017

அரசு மருத்துவமனைகளில் 1,000 டாக்டர்கள் நியமனம்: கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,013 டாக்டர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 1,223 டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காகதமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (எம்ஆர்பி) சார்பில் சில மாதங்களுக்கு முன்பு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்ச்சி பெற்றவர்களில் 1,013 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.

இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தின் (டிபிஎச்) மூலம் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நேற்று தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதில் 1,013 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று மீதமுள்ள 210 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15-ம் தேதி நடக்கிறது. அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு பின்னர் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி