தீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துகள் : தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2017

தீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துகள் : தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை தெரிவித்தார்.
அக்டோபர் 15 முதல் அக்டோபர்17 வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். தினசரி இயக்கப்பட கூடிய 2,275 பேருந்துகளுடன் இந்த சிறப்பு பேருந்துகளும் அக்டோபர் 15 முதல் அக்டோபர்17 வரை இயக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். சென்னையின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். சென்னை கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

தீபாவளி பண்டிகைக்காக தற்போது வரை 32,204 பேர் முன்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். போக்குவரத்து துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 18ம் தேதி புதன்கிழமையன்று வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி