வால்பாறை,பந்தலுார்,கூடலுார் பள்ளிகளுக்கு நாளை(செப்-18)விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2017

வால்பாறை,பந்தலுார்,கூடலுார் பள்ளிகளுக்கு நாளை(செப்-18)விடுமுறை

வால்பாறையில் கன மழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18 )விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பந்தலூர் அருகே சேரம் பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் குமுளி அருகேகொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பெரியார் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

கோவை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. 2013 TET தேர்ச்சி பெற்றோர்களே!
    தற்போதைய நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் பாதிக்கபடுபவரா நீங்கள்!
    இம்முறை தொடர வேண்டுமா?

    மாதிரி படிவம்:

    ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

    பெயர் : க.பாரதி கண்ணன்
    பதிவு எண்: 13TE20209111
    அலைபேசி : 950095482
    முகவரி : 11/2 அன்னை இல்லம்
    லெட்சுமிபுரம்,
    காந்திதெரு, 
    திருமயம் வடக்கு,
    புதுக்கோட்டை -612043

    மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
    ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். 
    தங்கள் உண்மையுள்ள ....
    (தேர்வரின் கையொப்பம்)

    முடிந்த அளவில் புகைபட இணைத்து அனுப்பவும்
    மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
    WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
    Cell No :9500959482
    99426 61187
    90472 94417

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி