தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2017

தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை

ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் 2009-ன் படி மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணியில் நியமித்திருப்பதை மத்திய அரசு வரன்முறைபடுத்த முடிவு செய்துள்ளது.  தொடக்க கல்விக்கான 2 ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பை முடிக்காதவர்கள் பணி செய்து கொண்டே, தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர்ந்து உரிய தகுதியை அடைய வேண்டும் என மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை தனியார் பள்ளி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

அதே நேரத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடு வரும் 30-ம் தேதி என்பதை மேலும் நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 20,000 தனியார் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இதில் ஆசிரியர் பயிற்சி முடிக்காத 2 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணிபுரிவது தெரிய வந்துள்ளது. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப்படிப்பை முடிக்காவிட்டால், தங்களது பணியை அவர்கள் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரையில் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்கு முதல் வருடத்திற்கு ரூ.4,500-ம், 2-வது வருடத்திற்கு ரூ.6,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதியான ஆசிரியர்கள் மூலம் தான் கல்வி கற்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1 comment:

  1. Winners computerscience trb coaching centre erode.contact number 8072087722

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி