செப்டம்பர் இறுதியில் தென்மேற்கு பருவமழை நிறைவு: தமிழகத்தில் 38 சதவீதம் கூடுதலாக மழை பொழிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

செப்டம்பர் இறுதியில் தென்மேற்கு பருவமழை நிறைவு: தமிழகத்தில் 38 சதவீதம் கூடுதலாக மழை பொழிவு

தென்மேற்கு பருவமழை இம்மாத இறுதியில் நிறைவு பெறுகிறது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட 38 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கேரள மாநிலத்தில் தொடங்கும். அதன்பின்னர், நாடு முழுவதும் (தமிழகத்தை தவிர) பரவும். இந்த ஆண்டு மே 30-ம் தேதியே தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியது. நாடு முழுவதும் பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் இறுதி யில் நிறைவு பெறவுள்ளது.

6 சதவீதம் குறைவு

தென்மேற்கு பருவ மழை காலத்தில் ஜூன் 1 முதல் நேற்று முன்தினம் (செப்.19) வரை நாட்டில் சராசரியாக 834.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 787.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 6 சதவீதம் குறைவாகும்.இது வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி சராசரி மழையாகும்.நாடு முழுவதும் பருவமழை சராசரியாக பெய்திருந்தாலும், மாநிலத்துக்கு மாநிலம் மழைப்பொழிவு வேறுபட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் 86 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதேபோல குஜராத், ஆந்திரா, திரிபுரா போன்ற மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்துள்ளது. ஆனால் நாகாலாந்து, மணிப்பூர், உத்தரபிரதேசம், ஹரியாணா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக குறைவான மழை பெய்துள்ளது.வேளாண் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் உத்தரபிரதேசம், ஹரியாணா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 33, 30, 24 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றமாநிலங்களில் சரா சரியாக மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், ஒட்டுமொத்த சராசரியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகம்

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவ மழைதான் அதிகமாக கைகொடுக்கும். தென்மேற்குபருவமழையின்போது அதிக மழை இருக்காது என்றாலும் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி போன்றவற்றால் குறைந்த அளவு மழை பெய்யும். ஆனால், இந்தாண்டு ஜூன் முதல் தமிழகத்தில் 38 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. புதுவையில் 16 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்துள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க் கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி