Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Sep 18, 2017

58 விநாடிகளில் விற்று தீர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்


சியோமி நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi Mix 2 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கிய 58 நொடிகளில் விற்றுத்தீர்ந்தது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது ஸ்மார்ட்போன்களை பிளாஷ் சேல் முறையில் விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் ஒரு மாடல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருவது வழக்கம். விற்பனை தொடங்கிய சில விநாடிகளிலே போன்கள் விற்று தீர்வதும் வழக்கம்.தற்போது சியோமி நிறுவனம் இந்தியாவில் மெல்ல மெல்ல தனது ஷோரூமை நிறுவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் Mi Mix 2 மாடல் ஸ்மார்ட்போன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு நேற்று விற்பனைக்கு வந்தது.

விற்பனைக்கு வந்த 58 விநாடிகளில் விற்றுத்தீர்ந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக விற்பனையில்சியோமி நிறுவனம் முன்னேறி வருகிறது. சியோமி மற்றும் ஒரு சில ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி