தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு..


தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரை கணக்கை திறக்கலாம்.
இதனை 65 ஆக உயர்த்த என்பிஸ் ஓய்வூதிய குழு முடிவு செயதுள்ளதாக பிஎப்ஆர்டிஏ நிறுவன தலைவர் ஹேமந்த் தெரிவித்தார்.


ஓய்வூதிய பயனர் எண்ணிக்கை
தற்போது இந்தியாவில் உள்ளவர்களில்15 முதல் 16 சதவீதம் வரையிலான மக்கள் மட்டும் தான் ஓய்வூதிய பாதுகாப்புடன் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இரண்டு வகைகள்
என்பிஎஸ் திட்டத்தில் இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். முதல் வகையில் இடையில் பணத்தை எடுக்க முடியாது. ஆனால் வரி விலக்கு உண்டு. இரண்டாவது வகையில் இடையில் எடுக்கலாம் ஆனால் வரி செலுத்த வேண்டும்.

வயது
புதிய விதிகளின் படி 18 வயது முதல் 65 வயது வரை முதலீடு செய்யலாம். 70 வயது வரை முதலீடு செய்யலாம்.
 
முதலீடு வரம்பு
குறைந்தபட்சம் ஆண்டுக்கு 6000 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பிரிவு 80 சி இல் வரி விலக்கு பெறமுடியும்.

முதிர்வுக்கு முன் வெளியேறுதல்
முதலீட்டாளர்கள் 10 வருட முதலீட்டுக்கு பிறகு குழந்தைகள் கல்வி , திருமணம், உடல் நலக் குறைவு போன்ற காரணங்களில் வெளியேறலாம். 80 சதவீத தொகை வரை கார்பஸ் பெற வாய்ப்புகள் உண்டு.
 
பிரித்து முதலீடு
முதலீட்டாளர்கள் தனங்களது பணத்தை பங்கு சந்தை, அரசு பத்திரங்கள், நிரந்தர வருவாய் உள்ளிட்ட திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று தேர்வு செய்ய முடியும். முதலீட்டாளரின் 75 சடவித பங்கு வரை ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்ய முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி